பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1. வெட்சிப்படலம் 13 16. கொடை ஈண்டியநிரை யொழிவின்றி வேணடியோர்க்கு விருமபிவீசின்று. இ-ள் திரண்ட பசுநிரை ஒன்றும் தப்பாமே தம்மை வேண் டினவர்களுக்குப் பிரியப்பட்டுக் கொடுத்தது.எ-று. வ-று. அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண் வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட் செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி வரிச்சிலையாற் றந்த வளம். இ-ள். அழகிய கண்ணாற் சிறந்த கிணையையுடையவனும் துடி கொட்டும் அவனும் பாணிச்சியும் பாணனும் வெவ்விய கள்ளிற்குக் கொடுக்கும் விலையாகும். சிவந்த கண்ணினை யுடையராய்ப் போர்க்கு இடையாத மன்னர் பூசன்முகத்துக் கோபித்து வரிதலையுடைய வில் லாலேகொண்ட ஆனிரையாகிய செல்வம், எ-று 17. புலனறி சிறப்பு வெம்முனை நிலை யுணர்த்தியோர்க்குத் தம்மினுமிகச் சிறப்பீந்தன்று. (16) இ-ள். வெவ்விய வேற்றுப்புலத்தினது நிலைமையை அறிவித் தார்க்குத் தம்முடைய கூற்றினும் பெருகச் சிறப்புக்கொடுத்தது. எ-று. வ-று. இறுமுறை யெண்ணா திரவும் பகலும் செறுமுனையுட் சென்றறிந்து வந்தார் - பெறு முறையின் அட்டுக் கனலு மயில்வேலோ யொன்றிரண் டிட்டுக் கொடுத்த லியல்பு.