பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். தாம் இறும்வகையை ஆராயாதே இரவின்கண்ணும் பக லின்கண்ணும் கொல்லும் பகைப்புலத்துப்போய் ஆராய்ந்துவந்தார் பெறக்கடவ பங்கின்மேலும் கொன்று எரியும் கூர்வேலினையுடை யோய், ஒன்றாதல் இரண்டாதல் பசு ஏற்றிக்கொடுத்தல் முறைமை, எ-று. 18. பீள்ளை வழக்கு பொய்யாது பண்மொழிந்தார்க்கு வையாது வழக்குரைத்தன்று. (17) இ-ன். தப்பாமல் நிமித்தஞ்சொன்னோர்க்கு வஞ்சியாதே பெறு முறைமையைச் சொல்லியது. எறு. வ-று. புல்லார் நிரைகருதி யாஞ்செல்லப் புண்ணலம் பல்லா ரறியப் பகர்ந்தார்க்குச் --சொல்லாற் கடஞ்சுட்ட வேண்டா கடுஞ்சுரையா னான்கு குடஞ்சுட் டினத்தாற் கொடு. இ-ள். பகைவாது ஆனிரையைக்கொள்ள நினைந்து யாம் போக நிமித்தநன்மையைப் பலரும் உணரச் சொன்னார்க்கு மொழி யாற் பெறு முறைமை இதுவென்று கருதவேண்டா: ஒன்றொரு குடம்பால் போதும் மிக்க முடியினையுடைய பசு நான்கு இளங் கள் தோறும் கொடு. எ-று. கடஞ்சுட்டவேண்டா கொடுவெள்க. 19. துடி நிலை தொடுகழன் மறவர் தொல்குடி மரபிற் படுக ணிமிழ்துடிப் பண்புரைத் தன்று. 18 இ-ள். கட்டும் சுழல்வீரர் பழங்குடி முறைமையில் மிக்க கண் ணினையுடைத்தாய் ஒலிக்கும் துடியைக் கொட்டும் அவன் குணத்தைச் சொல்லியது. எ-று. வ-று முந்தை முதல்வர் துடிய ரிவன்முதல்வர் எந்தைக்குத் தந்தை யிவனெனக்கு-வந்த