பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1. வெட்சிப்படலம் குடியொடு கோடா மரபினோற் கின்னும் வடியுறு தீந்தேறல் வாக்கு. 15 இ-ள். என் பாட்டனுடைய பாட்டன் முதலாயினோர்க்குத் துடி கொட்டினார் இவன் பாட்டனுடைய பாட்டன் முதலாயினார்; என் தமப்பனுக்கு இவன் தமப்பன் துடிகொட்டினான்; இவன் எனக்குத் துடிகொட்டுவான்; வழிவந்த குடிமுறைமையோடு பிறழாத முறை மையினையுடையவனுக்கு இன்னமும் வடித்தலுற்ற தித்தித்த மது வினது தெளிவை வார்ப்பாயாக, எ-று. 20. கொற்றவைநிலை ஒளியினீங்கா விறற்படையோன் அளியினீங்கா வருளுரைத்தன்று. (19) இ-ன். விளக்கத்தினின்றும் ஒழியாத வெற்றியான்மிக்க ஆயுவு தத்தை உடையோளது இரக்கத்தினின்றும் ஒழியாத கருணையைச் சொல்லியது. எ று. வ-று. ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக் கூளி மலிபடைக் கொற்றவை-மீளி அரண்முருங்க வாகோள் கருதி னடையார் முரண்முருங்கத் தான்முந் துறும். இ-ள். சிங்கத்தாற் சிறந்த அழகிய கொடியினையும் பசுங்கிளி யினையும் பாயும் கலையினையும் பேய்மிக்க படையினையும் உடைய துர்க்காதேவி, தலைவன் பகைவர் குறும்புமுறிய ஆனிரையைக் கொள் கையை நினைக்கிற் பகைவர் மாறுபாடுகெடத் தாள்முன்னே எழுந் தருளும்.எ.று. 21. வெறியாட்டு வாலிழையோர் வினைமுடிய வேலனொடு வெறியாடின்று. (20)