பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

கலைமாமணி தமிழாகார், பேராசிரியர் டாக்டர் ஆறு. அழகப்பன். எம்.ஏ.;எம்.லிட், பி.எச்.டி., தமிழ்த் துறைத் தலைவர், இந்திய மொழிப்புல முதன்மையர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அணிந்துரை அண்ணமலைநகர் 3-5-88 புறப்பொருள் வெண்பாமாலை தமிழின் தொன்மை இலக்கண மாகிய தொல்காப்பியத்திற்குப் பின்னர்ப் புறப்பொருள் குறித்த தனித்த இலக்கண நூலாக வெளிவந்த சிறப்புடையது. சேரமர் பினரைச் சேர்ந்த 'ஐயனாரிதனார் என்பவர் இந்நூலின் ஆசிரியராவர். இவர் சைவ சமயத்தவராயினும் பொதுநோக்குடையவர். இந்நூல் இளம்பூரணர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் நச்சினார்க்கினியர் முதலியவர்களால் எடுத்தாளப் பெற்றுள்ள மையால் இந்நூலாசிரியர் இவர்கட்கு முன்பிருந்தவர் எனலாம். இவர் காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் என்பர் இந்நூலுக்கு உரை வரைந்தவர் சாமுண்டி தேவநாயகர் என்பராவர். புறப்பொருள் வெண்பாமாலை' என்பது புறப்பொருளுக்கு இலக்கியமாகிய வெண்பாக்களின் வரிசையுடையதெனப் பொருள்படும். அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவரால் செய்யப்பெற்ற பன்னிரு படலம்' என்னும் நூலின் வழி நூல் என்பது இந்நூலின் சிறப்புப்பாயிரத்தால் அறியப் பெறும். இந்நூலிற்குச் சாமுண்டி தேவநாயகர் வரைந்த உரை பதவுரையாக உள்ளது. பதவுரைக்குப் பின் முடிவுகளும் உள: இவற்றுள் சில வினாவிடை அமைப்பின.