பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 பாற்கடல் கள், வாய்பாடு ஒப்பிப்பது போல், கோஷ்டியாய்ச் சொல்லுவோம். "ஆமா என்னமோ சொல்றேள்; காரியத்தில் காணோம். என்னைச் சுற்றி அஞ்சுபேர் இருக்கேள். முதுகைப் பிளக்கிறது; ஆளுக்கு அஞ்சு நாள்-ஏன், நானும் செய்யறேன். என் பெண் செய்யமாட்டாள்; அவள் வீதத்தை நான்தான் செஞ்சாகணும். ஆளுக்கு அஞ்சு நாள் காலையிலெழுந்து காப்பி போடுங்களேன் என்கிறேன். கேட்டதுக்குப் பலன் எல்லோரும் இன்னும் அரை மணி கேரள் அதிகம் தாங்கறேள்.' எங்களுக்கு ரோஸ்மாயிருக்கும். இருந்து என்ன பண்ணுகிறது. அம்மாவை எதிர்த்து ஒண்னும் சொல்ல முடியாது. காங்கள் 5ஆமணிக்கு எழுந்தால் அவர் ஐந்து மணிக்கு எழுந்து அடுப்பை மூட்டியிருப்பார். ஐந்து மணிக்கு எழுந்தால் அவர் 4 மணிக்கு எழுந்து காப்பியைக் கலந்துகொண்டிருப்பார். நாலரை மணிக்கு எழுந்தால் அவர் 4 மணிக்கு; இந்தப் போட்டிக்கு யார் என்ன பண்ண முடியும்? 'வாங்கோ, வாங்கோ; காப்பியைக் குடிச்சிட்டு போயி டுங்கோ,ஆறி அவலாய்ப்போய் அதை மறுபடியும் சுட வைக் காதபடிக்கு; அதுவே நீங்கள் பண்ற உபகாரம். நான்தான் சொல்றேனே; நான் ஒண்டியா யிருந்தப்போ எல்லாத்தை யும் நானேதானே செஞ்சாகனும், செஞ்சிண்டிருந்தேன். இப்போ என்னடான்னா கூட்டம் பெருத்துப் போச்சு: வேலையை எலம் போட்டாறது. ஊம், ஊம்...... கடக் கட்டும்...நடக்கட்டும் எல்லாம் நடக்கிற வரையில்தானே? கானும் ஒரு நாள் ஒஞ்சு நடு ரேழியில் காலை நீட்டிட் டேன்னா, அப்போ நீங்கள் செஞ்சுதானே ஆகணும்: