பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கம்பி உடல் தாண்டி, அன்பு, விசுவாசம், பக்தி, அபிமானம், நட்பு, சினேக தடங்கள் தாண்டி, வக்கிரம்தாண்டி ஆணுக் கும் ஆணுக்கும் கூட காதல் உண்டு. புரிந்தவர்க்குப் புரி யட்டும். காதல் யாவரையும் கடந்தது. ★ கள்ளிரவில் எழுந்து கிணற்றடிக்குச் சென்றேன். பிள்ளையார் அழைக்கவில்லை. நானேதான். எட்டிப் பார்க்கிறேன். உள்ளே கும்மிருட்டு, எங்கும் கிசப்தம். அமைதி. என் மனதில் தவிர.ஆழம் இருபது அடி. குழந்தைகள் மூன்று. பெண்டாட்டி, ஊ-ஹகும். எவனும் எனக்கு இரக்கம் காண்பிக்க மாட்டான். கையாலாகாத கப்பி என்று தாற்றுவான். ரோசம் சாவையும் தாண்டி எட்டுமோ? இதென்ன உள்ளிருந்து சத்தம். நச்சென்று தும்முகிற மாதிரி அச்சமாயிருக்கிறதே. உறைக்கு உறை இடை சந்தில் கிணற்றை வளைத்துப் படுத்திருக்குமா? கிணற்றடியிலிருந்து திரும்புகிறேன். வாசற்பக்கம் சிமிட்டி மேடை மீது அமர்கிறேன்: குளிர்ந்த காற்று நெற்றியை ஒற்றுகிறது. காற்றின் வழி அம்மா உனக்கு கமஸ்காரம். எட்ட, TENT சினிமாவிலிருந்து பின்னணி இசை, SUSPENSE கட்டம் போலும். டிரம்ஸ் திடு திடும் திடும் திடும், க்றீச்சில் அலறும் ஒற்றை வயலின். இந்த சினிமாப் பின்னணி இசையெல்லாம் எந்த ராகத்தைச் சேர்த்தி? ஏதோ சப்தங்களின் அவியல். எனக்குச் சிரிப்பு வருகிறது. உடனே தெளிகிறது. உணர்ச் சிக்கு முக்கியம் கொடுத்து, இதுவும் ஏதோ அடிப்படையில்