பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


160 கம்பி புத்திமதி. யார் கேட்டது? த்ரோக வின்னியாசம். எல்லையே இல்லை. ஆனால் இவைகளை நான் குறிக்க வில்லை. ராக்த்ரோக் (திடும் திடும் திடுதிடும்-ஒற்றை வயலினில் ஒற்றைத் தந்தியின் க்றிச்-இது உருவகத்துக்கு மட்டும்-ஸ்வரங்கள் இன்னும் பிடிபடவில்லை) இவைகளால் உருவாகவில்லை. 责 萤,寮 வேலைக்குப் பேட்டிக்கு அந்தக் காரியாலயத்தை நான் அடைந்தபோது, முன் அறையில் ஏழுபேர் காத்திருந்தனர். எல்லோரும் டிப்டாப். வண்ணானுக்கு வக்கில்லாமல் தோய்த்துத் தோய்த்து கிறமே மக்கிப்போன என் உடை மீது என்னை அறியாமலே என் கண்ணோட்டம் விட்டதும்-திரும்பப் போய்விடலாமா? இவர்களுக்கு எதிரே எனக்கென்ன சான்ஸ் இருக்கப்போகிறது? தீர்மான மாக ஸ்படிகப்படுமுன் "மிஸ்டர் ராதாகாந்த்' அட அதற்குள்ளேயா? எழுந்து உள்ளே சென்றேன். அவர் என்னை கிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. ஏதோ பேப்பர்களைத் திருப்பிக் கொண்டிருந்தார். 'விட் டெளன் ப்ளிஸ்.' அவருக்கு ஏறக்குறைய என் வயது மூன்று நான்கு கூட இருக்கலாம். கறுப்பு லேசாய்த் தோய்ந்த மூக்குக் கண்ணாடி எதிரே மேஜை சிறியது. அவர் புரட்டிக் கொண்டிருக்கும் பைலைத் தவிர துடைத்து விட்டிருந்தது. கருங்காலிப் பளபளப்பில் அடியில் பிம்பங்கள் தெரிந்தன. மேஜை இதற்கு மேல் தேவையுமில்லை. பதவி உச்ச உச்ச முக்கியமான ஒன்றிரண்டு கையெழுத்துக்குத்தானே! மிச்சத்தை கொந்து, மண்டையைக் குடைந்துகொண்டு, சத்தைப் பிழிந்து எடுத்துத்தர, கீழ்த் தடவாளங்கள்