பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


175 து லம் அப்பா சொன்னபடியே அவருடைய தேவைகள், தாமாகவோ, அவர் முயற்சியிலோ வெகுவாய்க் குறைந்து விட்டன. சாதத்தைப் பருக்கையாக எண்ணினாற்போல், உணவு ஒரு அளவுதான். அதுவும் ஒரு வேளை. ஒற்றைக் கட்டை வேட்டி. மேல் துண்டு அக்கறையில்லை. அவசிய மில்லாமல் படிதாண்டுவதில்லை. பேச்சும் மட்டுக்கட்டித் தான். வீட்டு சன்யாசி. சன்னியாசிக்கு வீட்டுள் என்ன வேலை? வெளியில் விரட்டவேண்டும். யார் சொன்னது? நான் சொல்கிறேன். பின்னே என்ன-குடும்பத்துடன் ஒட்டாமல், ஒட்ட முடியா மல் அப்பாவாயிராமல்... ஆனால் அப்படியும் சொல்வதற்கில்லை. ஒரு நாள் ஒரே கலகலப்பு. கும்மாளம். முதுகையறைந்து (pais) பேச்சு.மறுநாள் வெளியே கக்காமல் உள்குமுறும்எரிமலை, பொறி பறக்கும் கண்கள். ஏன்? ஏன்? ஏன்? யாரறிவார்? அண்டமுடியாத அனல் வெம்மை. உள்ளேயே தளைக்கும் பிழம்பு முகத்தில் டால் அடிக்கும். பயமாயிருக்கும் பவழ வண்ணன். ரூத்ரமூர்த்தி. பாட்டி செத்த கையோடுதான் அப்பா மோச மாயிட்டார். சிதையில் கடைசி வரளி பாட்டி முகத்தை மூடும் வரை, மூடியபின்னரும் அப்பா அந்த இடத்தையே விறைத்துக்கொண்டிருந்த பார்வை பயமாயிருந்தது. எரிச்சலும் வந்தது. என்ன கினைத்துக் கொண்டிருக்கிறார் மனுஷன்? இவருக்காகப் பாட்டி சதமாக இருந்து கொண்டேயிருக்க வேனுமா? இருக்கலாமா? பின்னால் அதனுடைய சிக்கல் களை அறியாரா? அப்பா, பாட்டியிடமிருந்து அவளுடைய அம்சத்தை வாங்கிக்கொண்டுவிட்டாரோ? இருவருக்கும் முக ஒற்றுமை