பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Gu)#『。 ザ。互f・ 20? GrøršG 2-Libų grir “sszú.” This Man Means Business. இந்த மனிதன் திடீரென அன்னியனாகி விட்டான். நடுக்கூடத்தில் உட்கார்ந்திருக்கையிலேயே, ஏதோ இடு வகையில் மேல்கூரையைப் பிரிக்கிறான்...இந்த மனிதன் அஞ்சத் தக்கவனாகி விட்டான். அஞ்சுகையிலேயே மனம் ஏதோ ஒரு விடுதலையில் துள்ளிற்று. என் உண்மையைச் சந்திக்கப் போகிறேன். காத்திருந்த இத்தனை நாட்களும் ஒரு வழியா பின்னால் போச்சு... அப்பாடா! உங்கள் பயமுறுத்தல் இப்பவோடு சரி. “Yes உமா... இந்தப் பொய்மையைக் கலைச்சாகனும். காம் விவரங்களுக்குள் போய் அலசிக் கொண்டு ஒருவரை யொருவர் குற்றம் சொல்லிக் கொண்டு, ஒருவரையொருவர் இன்னமும் ரணமாக்கிக் கொண்டிருக்க வேண்டாம். கட்டம் முற்றிப் போச்சு. காம் கணவன்- மனைவியாக வாழவில்லை. ஒருவரையொருவர் பலப்பரீட்சையில் இறங்கி விட்டோம். இது கணவன் மனைவியிடையே வரக்கூடாது. ஆனால் வந்துவிட்டது. யார்மேல் தப்போ யார் மேலானும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் வந்து விட்டபின் பரீட்சை கடந்தே ஆகணும். கடக்கட்டும். இதற்கு ஒரு முடிவு கண்டாகணும். அதற்காகத்தான் இப்போ சொக்கட்டான் ஆடப் போகிறோம், பணயத்துக்கு' 'பணயமா?’-ஆச்சரியத்தில் கிமிர்ந்தேன்.

  • *Yes’’

'அஞ்சு பைசா, பத்து பைசா?’’ 'ஏன், அதைவிடப் பெரிதாக உன்னால் கினைக்க முடியல்லையா?” p "ரூபாய்."