பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/239

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


&&伊 கறந்த பால் பாஸ்கர் மழுங்குணி மாங்கட்டையா? அல்ல அழுத்தக் காரரா? அல்ல நமக்கேன் பாடு நடைமுறைத் தத்துவத்தின் கடைப்பிடிப்பா? இப்படி இருப்பது சரியில்லை என்று எனக்கே தெரிகிறது. ஆனால் ஏன் இப்படி இருக்கிறேன்? புரியவில்லையே! சமையல்கட்டு வேலை முடிந்த பின்னர் ரேனு ஒரு தலையணையையும். ஜமக்காளத்தையும் எடுத்துக்கொண்டு பக்கத்தறைக்குச் சென்று விட்டாள். இது அவர்களிடையே புதுசு. இது ஒரு சவால்தான் அந்தக் கேள்வியைக் கேட்க. No, I won't . குறுக்கிடுவது வறட்டு கெளரவமா? எ லி யுடன் பூனை விளையாட்டா? ஈசுவரி தோன் சஞ்சலத்தைத் தீர்க்கணும். - நள்ளிரவில் எழுந்து பூஜையறைக்குச் சென்றார். குத்துவிளக்கில் சுடர் முத்தாட்டம் எரிந்து கொண்டு, அசைவற்று கின்று, அது எரிந்த ஒளியின் கிழலாட்டத்தில் அவள், அவளுடைய அற்புதமான மந்தஹாஸத்தைப் புரிந்து கொண்டு கண்களை மூடி தவத்தில் இருக்கிறாள். உள்ளே திரும்பிவிட்ட பார்வைக்கு அவளுக்கு என்ன தெரி கிறது? இல்லாவிட்டால் ஏன் இந்த அற்புதமான புன்னகை மந்தஹாசினி. அவள் கட்டை விரல் ஊசி முனையை அழுத்திக் கொண்டிருக்கிறது. பாஸ்கர் குனிந்து உற்று நோக்கினார். இன்றுதான் புதிதாகப் பார்ப்பதுபோல் தோன்றியது. இந்த விக்ரஹத்தைச் செதுக்கிய சிற்பியே ஒரு அவதார புருஷனாகத் தான் இருந்திருக்கவேண்டும். எவ்வளவு சன்னமான ஊசி! ஆனால் என்ன திடம்? தேவியை அவள் தவத்தில் அவளைத் தூங்கவிடாமல் ஸ்தாதவத்தில், தவ