பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Gü伊。呼。JT。 18 மாமியார்தான் எடுத்துப்போட்டுக் கொண்டு சாப் பிட்டு விட்டு ('என் கையும் காலும் என் வசமிருக்கிற வரைக்கும் நான் ஒருத்தர் கையையும் எதிர்பார்க்கப் போற தில்லை. ஈசுவரா, நான் காலும் கையோடு கல்லபடியா வளைய வரத்துலேயே என்னைக் கொண்டு போயிடு. இந்தப் பீடைகளிடம்,காட்டிக் கொடுக்காமே!”) கொல்லை ரேழி வாசல்படி மேல் தலைவைத்துக் காலை நீட்டிக் குறட்டையும்விட ஆரம்பிச்சாச்சு. அங்குக் காற்று சொகம்மா வரும். சமையலறையில் போட்ட சாமான் போட்டபடி கிடக்கும். மாமியாரின் எச்சிற்கலை காஞ்சின் டிருக்கும். எந்த சாமானை மூடியிருக்கோ? திறந்து கிடக்கோ? கிடக்கிறது கிடக்கட்டும்; கான் தானே பாக்கி. சாப்பிட்டாலும் போச்சு. சாப்பிடாட்டாலும் போச்சு. இப்படியே சேர்ந்தாப் போலே ஒரு பத்து நாள் சாப்பிடா மல் இருக்க முடிஞ்சா நான்கூட பாக்கியில்லாமல் ஆயிடு வேன். நான் செத்த அப்புறம் எனக்கென்ன தெரியப் போறது?’ அப்படி கினைத்தாலும் அவளால் பசி தாங்கமுடியாது என்று அவள் கன்கு அறிவாள். இந்த வீட்டுக்கு வந்த பிறகு முதல் பகிரங்கத் தகராறே அதில்தான் ஆரம்பித்தது. மாமியார் போர் மாதிரி சோற்றை உள்ளே இறக்கினா லும் சமயத்தில் மூன்று நாள் சேக்தாப்போல், முழுங்கு ஐலம் கூட இல்லாமல் வேலை செய்துகொண்டு சுறுசுறுப் பாய் வளைய வரமுடியும். ஒருமுறை அவள் மாமியார் வம்படிக்க (தெரியாதா அவளைப் பற்றிக் குறைப்பட்டுத்தான்!) பக்கத்திலே எங்கோ போனவர், போனார் போனார் போனாரே!... பேச்சு சுவாரஸ்யத்தில் திரும்பியே வரல்லே. (அதென்ன தான் அப்படி ஒரு பேச்சு இருக்குமோ?. சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிண்டு கேக்கறவாளுக்கு அலுத்