பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 பார்க்கவி னேயே என்னைக் கடித்தாய் விட்டது. நான் சாகவில்லை. ஆனால் உயிரோடு இல்லை. இனிமேல்தான் என்ன கடக்கப் போகிறதென்று தெரியவில்லை. நீயும் ஆளாகி விட்டாய் பூக்காத பூக்களைப்பற்றி என்னோடு தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறாய். சே என் பிழைப்பு ஒரு பிழைப்பா' காம்போடு இதழை வீசி எறிந்தார். பூமி யையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பாவுக்கு இன்னிக்கு என்னவோ வெறி, தெரியல்லே! தன்னுடைய தோல்விகளுக் கெல்லாம் அவளைப் பொறுப்பாக்கிக் கொண் டிருந்தார். அது தெரிந்தது. 姿 姿 淑 உச்சி வெய்யில் கூட அவ்விடத்தில் தெரியாது; அவ் வளவு குளுமை. அது அவளுடைய ரகஸ்ய இடம். ஆற்றுக் கரை மேட்டில் ஒட்டினாற்போல் கின்ற இரு தென்னங் கன்றுகளிடையில், கெருக்கமாய்ச் செக்தாழம் புதர்கள் சூழ ஒரு ஆள் மல்லாந்து படுக்குமளவு இடம் அங்கு யார் கண்ணுக்கும் புலப்படாது பதுங்கியிருந்தது. புதர்களின் நெருக்கத்தில் அங்கு எப்பவுமே தண்மை தரும் இன்ப இருள் தேங்கிற்று. அங்கு அவள் இப்பொழுது ஒரு புற மாய்ப் படுத்து இருக்கையில் பூமியைப் பொத்திய இடது செவியில், பூமிமேல் அதிரும் அத்தனை சப்தங்களும் படுகையில் பூமியின் நாடியே கேட்பதுபோலிருந்தது. இப்பொழுது குபீர் குபிர் என்று கிளம்பும் செந்தாழை யின் மணம் சிந்தனையின் போதையுடன் கலக்கையில் நேரம் போக்கற்று கின்று விட்டது. இன்னமும் சாப்பிடவில்லை. வயிறு காலி. ஆனாலும் இன்று பசிக்கனும் சாப்பிடணும்னு தோணல்லே,