பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

છો:Tિ - P. T.T , 33 அடக்கமாய் அடக்கிக் கொண்டாற் போல் இதழ்களுக்குள் பூவுக்கு வயிறு கட்டியிறுப்பது போல்... அப்பா சொல்லுவார், அதுகளுக்கு என்ன கவலை ஆயுசு என்னவோ குறைச்சல்தான். ஆனால் அதுகளுக்கு ஆயிசு வரை அழகும் சிரிப்பும்தான்...னு. கீழே ஏதோ சாமான் உருண்டு சிந்தனையைக் கலைத் தது. போய்ப் பார்க்கலாமா, வேண்டாமா? என்னவா யிருக்கலாம்? ஒஹோ, சுவாமி பிறையுள் எலி மாட்டிண்டு விக்ரஹத்தைத் தள்ளி விட்டிருக்கு. அம்மாதிரி அந்த சப்தத்தை அடையாளம் கண்டு கொண்டதுமே அதை யொட்டி அப்பொத்தான் இரண்டு மாதங்களுக்கு முன்னால் கேர்ந்த ஒரு சம்பவம், நினைவு முழுக்கிலிருந்து மேடு எடுத்துக் கொண்டு எழுந்தது. அதை ஆயுசுக்கும் மறக்க முடியாது. அன்று வெள்ளிக்கிழமை மாலை. வெள்ளிக்கிழமை வந்தாலே நல்ல கிழமையாகப் போகவேண்டும் என்ற க்வலையுண்டு. இந்த வீட்டில் வெள்ளிக் கிழமைக்கும் சண்டைக்கும் அவ்வளவு ஏர்வை. அப்போத்தான் விளக் கேற்றிவிட்டு அடுப்பில் ஏதோ காரியமாய் இருந்தாள். திடீர் என்று எதிர் அறையில் ஒரு வீறல். மோசம்| மோசம்!” 'என்ன? என்ன? அவள் கணவன் மாடியிலிருந்து திடு திடுவென இறங்கினான். 'நூறு ரூபாய் கோட்டு என் பெட்டியில் வெச்சிருங் தேனே? யார் எடுத்தேள்? உண்மையைச் சொல்லிடுங்கோ, யார் எடுத்தேள்?’ ஒரே கர்ஜனை. அம்மா கையைப் பிசைஞ்சுண்டு சிக்கறார். மூஞ்சியே வெடிச்சுடும் போல், தக்காளிப் பழம்போல் சிவந்து போயிருக்கு. -