பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 அரவான் குழந்தை மறுபடியும் கத்த ஆரம்பித்துவிட்டது! அவன் கண்கள் ஜ்வலிக்க ஆரம்பித்தன. இண்ணைக்கு அவன் மனம் கோவடிக்கறத்திலேயே அவளுக்குச் 'சந்தோசமா? 'என் அதுக்குள்ளேயும் விலக்கிட்டே?” சரிதான் என் புளைப்பும் உன் புளைப்பும் அதிலே தானிருக்குது.' “என்ன அம்மே வந்ததே மொதக்கொண்டு ஒரு மாதிரியாயிருக்கே. புதிர் போட்டுப் பேசுறே-என்ன? உடம்புக்கு பூசைக்காப்பு போடணுமா?" அவள் குழந்தையை இடுப்பில் வைத்துக் குலுக்கிய வண்ணம் திண்ணையில் உலவியபடி, சமாதானப்படுத்த முயன்றுகொண்டே சொன்னாள். "கொஞ்சம் அவசரப்படாமெ நான் சொல்றதைக் கேளு-இன்னிக் காலையிலே இப்படி போனேனா-இந்த ரோட்டோடே போனேன்-அப்புறம் ஒரு சந்துலே நூளைஞ்சேன். ஆனால் அது சந்தில்லே. ஆள் நடமாட்டம் அதிகமாயில்லே. ரெண்டு பக்கமும் தனித்தனியா பங்களா வுங்க இருக்திச்சு. அப்புறம் அப்படித் திரும்பினேன். இப்படித் திரும்பினேன். எனக்கு வளி மறந்து போச்சு. சுத்துமுத்தும் பாத்தா ஒருத்தருமில்லே. எனக்கு ஒரே அளுகையா வந்திட்டது. நான் ரோட்டோரமா கின்னிட்டு அளுதுகிட்டு இருக்தேன். "அப்போ ஒரு ஆள் அந்தப் பக்கமா வந்தான். என்னைத் தாண்டி போனான். அப்புறம் திரும்பிப் பார்த் தான். சின்னான். மேலே இன்னும் கொஞ்சம் கடந்து போனான். மறுபடியும் என்னை முளிச்சுப் பார்த்தான். அவன் பார்வை ஒரு மாதிரியாயிருந்திச்சு. என் முகத்தைப்