பக்கம்:புலவராற்றுப்படை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறங்காண் திறலினனென்க.

புலவர் வம்மின் - புலவீர் வருதிர்,

பொருநர் வம்மின் - பொருநர்காள் வருதிர்,

பலர் புகழ் கூத்தர் உம் பாணர் உம் வம்மின் - பலரும் புகழ்கிற கூத்தரும் பாணருமாகிய நீவிரும் வருதிர்,

இ புரவலன் வாயில் போரா கதவது என - இந்தப் புரத்தல்வல்லானுடைய தலைவாசல் ஒன்றை யொன்று பொருந் தாத கதவினையுடையதென்று,

ஒன்றையொன்று பொருந்தாதவென்றது இரண்டு கதவு களுஞ் சேராததை; என்ருல், அது மூடப்படாத கதவென்பது. தம்மிற் சேர்ந்த கதவென்பதைப் போர்க்கதவென்ருர் பட்டினப் பாலையிலும்.

எர் ஆர் வான் கொடி நுடங்குபு நுடங்கி அகவு ஐ அம் மாடத்து முகவை ஊரன் - அழகு நிறைந்த சிறந்த கொடிகள் அசைந்தசைந்து கூப்பிடுகின்ற அழகிய மாடங்களையுடைய முகை யென்னு மூரையுடையவனும், -

அடுக்கு - விரைவுப்பொருட்டு, ஐ - அசை. முகவை - இராமநாதபுரம். Þ

மேல் அறிவு உயர்ந்த நூல் அறி புலவன் - மேன்மையான அறிவுயர்ந்த நூல்களையறிந்த புலவனும்,

முத்தம் விளை வயல் பாலவனத்தம் நாடு செகில் கொண்டு - முத்து விளைகின்ற வயல்களையுடைய பாலவனத்தமென்னு நாட் டினைத் தோண்மேற் சுமந்து,

பீடு கெழு குடி தழிஇ - அங்குள்ள பெருமை மிக்க குடிகளைத் தழுவி, -

முற்ற காக்கும் கொற்றம் குடையினன் - முழுதுங் காக்கின்ற வெற்றிக் குடையினை யுடையவனும்,

விரை கமழ் கண்ணியன் பாண்டித்துரை என - மணங்கமழ் கின்ற மாலையினை யுடையவனுமாகிய பாண்டித்துரைத் தேவ னென்று பலர் சொல்ல,

27