பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

赛盛 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

4 i

உடையார் முன் உடைந்ததே

உடையார் பாளையம் என்ற ஊரில் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் மிக நீளமாக இருந்ததால், எல்லோரும் அவரை உடையார்’ என்றே அழைத்தனர்.

அவரிடம் பரிசு பெறுவதற்காக, அவரைப் போற்றிக் கவிதைபாடி, அதனுடன் ஒரு தேங்காயை யும் வாங்கிக் கொண்டு சென்றார் புலவர்.

குறுநில மன்னர் உடையார், மண்டபத்தில் சரிகை உடைகளை அணிந்து, தலையில் கிரீடத் தைச் சூட்டிக் கொண்டு வெள்ளிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். -

புலவர் மண்டபத்துக்குள் நுழைந்தார். அவர் அதற்கு முன், குறுநில மன்னரையோ, மண்டபத் தையோ பார்த்து அறியாதவர்.

அங்கே சென்றதும் உடல் நடுங்கி, கால்கள் தடுமாறி, கையில் இருந்த தேங்காய் தவறிக்கீழே விழுந்து உடைந்து விட்டது.

புலவரோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, 'மக்கள் அனைவரும், உங்களை, உடையார், உடையார்’ என்று கூறி களிக்கின்றனர். அத்தகைய உடையார் முன், இது உடைந்து விட்டதே' என்று கூறினார்.