பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

64 புலவர்கள் உதிர்த்தமுத்துக்கள்

அதைக் குறிப்பால் உணர்ந்த புலவர், தட்டாரைப் பார்த்து, 'பத்தரே! நீர் பொடி வைத்துத்தானே நகை செய்கிறீர்?’ என்று கேட்டார்.

"ஆமாம்” என்று கூறி தலையை அசைத்தார் பத்தர். - -

பொடி போடுகிறவருக்கு அவர்கள் பேச்சு விளங்கவில்லை.

'பொடி டப்பி, பொடிடப்பி' என்று சொல்லிக் கொண்டிருந்தார் அவர். முன்பு கேட்டபடியே, மறுபடியும் பத்தரிடம் கேட்டார் புலவர். பத்தரும் முன்பு போலவே, ஆமாம் என்றார். ஆயினும், பொடிகாரருக்கு அது புரியவில்லை. தட்டார்கள் பொடி வைத்து, நகை செய்வர் என்றே எண்ணி னார் அவர்.பொடி டப்பியை இழந்தவருக்குச் சினம் எழுந்தது.

புலவர், பத்தரைப் பார்த்து, இனிமேலும் பொடி வைத்துகொண்டு நகைக்காதீர் இனிமேலும்,

அவர் பொறுக்கமாட்டார்’ என்றார்.

பத்தர், உடனே பொடி டப்பியைக் கொடுத் தார், பொடி போடுகிறவரிடம். அதன் பின்னரே, "பொடி வைத்து நகை செய்தல்' என்பதன்

பொருள் அவருக்கு விளங்கியது.