பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

முல்லை பிஎல். முத்தையர் 鑫7。

புலவர் குறிப்பிட்ட நேரத்தில் வர இயலாமல் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தார்.

அப்போது கழகத் தலைவர் எழுந்து, 'அன்பர் களே! புகார் என்பதுபற்றி பேச வேண்டிய புலவர் குறிப்பிட்ட நேரத்தில், இங்கு வந்து சேர இயலா மல், தாமதமாக வர நேரிட்டது. இதுபற்று நீங்கள் புகார் செய்யக்கூடாது. அவர்தம் விடுதியிலும் புகாராய், புகாரைப்பற்றிப் பேச வந்துள்ளார். பேசி முடியும் வரை எங்கும் புகார். ஆகவே, நீங்களும் புகார் கூறாமல், புகார் பற்றிய சொற்பொழிவைக் கேட்டு மகிழ்வீர்களாக!' என்றார்.

(காவிரிப்பூம்பட்டினத்துக்குப் புகார்’ என்ற பெயர் உண்டு; புகார்-எங்கேயும் போகமாட்டார். புகார்-குறை சொல்லுதல்; இவ்வாறு பல பொருள் கள் உண்டு) .

ఈ39 எது சிறந்தது?

சர்க்கரைப் புலவர் என்பது ஒரு புலவரின் பெயர்; சவ்வாதுப் புலவர் என்பது மற்றொரு புலவரின் பெயர். 兹

மேற்படி இரண்டு புலவர்களும் ஒருசமயம் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சர்க்கரைப் புலவர் அடிக்கடி தமது தமது பெருமையைக் குறிப்பிட்டே பேசலானார்.