பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாவது அதிகாரம் நாட்டு நிலை

... +  * -  -

புராண காவியங்கள் இயற்றப்புகுந்த கவிஞர்கள் முதலில் நாடு கோங்களை வருணிப்பதில் தங்கள் கவனங்களை மிகவும் செலுத்தி பிருக்கிறார்கள். பண்டைக் காலத்துச் சங்கநூல்களில் நாட்டு வளம் ஆங்காங்குக் கூறப்பட்டிருப்பினும் அது இயற்கை கலம் அணிந்து இனிதமைந்துள்ளது. பிற்காலத்தில் அவ்வியல்பு திரிந்து உயர்வு நவிற்சியும், கற்பனைகளும் ஒங்கி யிருக்கின்றன. அவ் வருணனைகள் காவியங்களுக்கு ஒர் சிறந்த அங்கமாகக் கருதப் பட்டு மேலும் மேலும் வளர்ந்து வாலாயின. நாடுகளையும் நகர ங்களையும் வருணனை செய்வதைக் கவிஞர்கள் ஒரு கடமையாகக் அருகிப் பெரிதும் உழைத்திருக்கின்றார். நாளடைவில் ஒருவரி வம் ஒருவர் முத்துற விழைந்த கம் சிங்கனசக்தியைப் பல வகை யிலும் விரித்துப் பாடி வந்துள்ளார். ஒன்றை ஒன்று நோக்கி ருக்கொண்டிருக்கலால் பல பாடல்கள் போலிகளாய்ப் பீடிழந் அள்ளன. அதனல் தற்கால அறிவியல் ஆராய்ச்சி யாளர்கள் புராண வருணனைகளை உயர்வாக மதியாமையோடு இகழ்வாகவும் வண்ண நேர்ந்தனர். உண்மையை ஊன்றி நோக்கின் தம் எண் ாம் பிழைபாடு உடையதென்பதை அவர் எண்ணித் தேர்வர். கருத்தையும் குறிக்கோளையும் கவனிக்க வேண்டும்; கண்ணுான்றி கோக்காமல் மேலெழுந்த வாரியாக எதனையும் தீர்மானித்து வகழ்ங்.துவிடலாகாது. கவி அமைகி துணுகிய நிலையது.

கதை வரலாறுகளைத் தொடர்ந்து பாடுவதைக் காட்டிலும் இயற்கை கிலைகளை விளக்கிச் செல்வதில் கவிஞனுக்கு அறிவும் ஆற்றலும் உலக அனுபவமும் அதிகம் வேண்டும். வருணனை என்றால் வெறும் கற்பனை அன்று; விற்பன நலங்கள் பல அதில் விளங்கிருக்கின்றன. நாட்டின் இயல்புகளைக் காட்டும் பாட்டுக் களில் நில மாட்சியோடு பல்வகைக் காட்சிகளும் பாவலன் ஆட் விகளும் ஒருங்கே காணப்படுகின்றன.

செழிப்பான ஒரு நாடு வளமும் நிலவளமும் உடைப தாய் நிலவியிருக்கும் ஆதலால் அதன் கிலைமையைத் தலைமை

| H.