பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 கம்பன் கலை நிலை

யாகப் பாவலர்கள் ஆவலுடன் கூறுகின்றனர். அங்கனம் கூறும் பொழுது யாரும் வியந்து நயந்து விழைந்து காணும்படி அக் காட்சிகளை விழுமிய நிலையில் அறிவு நலம் கனிய அமைத்திருக்கி ன்றார். நம் அனுபவத்தில் கண்டவற்றாேடு காணுதவற்றையும் கவிகள் கொண்டு வந்து காட்டுகின்றன. அக்காட்சியால் அங் கிலத்தின் மாட்சிகளை நினைந்து மகிழ்கின்றாேம்.

கோசல நாட்டின் கிலவளங்களைக் குறித்துக் கம்பர் அறுபது பாடல்கள் பாடியிருக்கிரு.ர். அவற்றுட் சிலவற்றை இங்கே வாைந்து காட்டுகின்றேன். அப்பாட்டுக்களின் பொருள் வளங் களை மனக்கண்ணுல் காணலாம் ; சொல்வளங்களை வாய்விட்டுப்

பாடிச் செவியால் அறியவேண்டும்.

வயல்களின் இயல்கள்

வரம்பெலாம் முத்தம்; தத்தும் மடையெலாம் பணிலம் , மார்ேக் குரம்பெலாம் செம்பொன்; மேதிக்குழியெலாம் கழுநீர்க் கொள்ளே பரம்பெலாம் பவளம்; சாலிப்பரப்பெலாம் அன்னம் பங்கர்க்

கரம்பெலாம் செந்தேன்; சந்தக் காவெலாம் களிவண் உட்டம். (1)

வளமலிந்த பலவகை ஒலிகள்

ஆறு பாப் அாவம் , மள்ளர் ஆஃல்பாப் அமலே அலேக் சாறுபாய் ஒசை ; வேலைச்சங்கின்வாப் பொங்கும் ஒகை : ஏறுபாய் தமாம் ; நீரில் எருமைபாப் து.ழனி இன்ன

மாறுமாருகித் தம்மில் மயங்குமாம் மருத வேலி. (2) மருதநிலக் காட்சி

தண்டலே மயில்கள் ஆடத், தாமரை விளக்கங் காங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்கக், குவளே கண் விழித்து நோக்கத், தெண் டிரை எழினி காட்டத், தேம்பிழி மகா யா ழின் வண்டுகள் இனிதுபாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ. (3)

சங்கு முதலியன தங்கியுள்ள நிலை

நீரிடை யுறங்கும் சங்கம் நிழலிடை புறங்கும் மேதி தாரிடை யுறங்கும் வண்டு தாமரை யுறங்கும் செய்யாள் தூரிடை யுறங்கும் ஆமை துறையிடை புறங்கும் இப்பி போரிடை புறங்கும் அன்னம் , பொழிலிடை புறங்கும் தோகை. (4)