பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கம்பன் கலை நிலை

என்று வேறு ஒரு பொருளும் தொனிக்கும்படி இவ்வாக்கிய களை அமைத்துள்ளமை காண்க. அன்னங்களோடு இன்னவா. இராமர் பன்னிப்பேசியது தமது மனைவியின் கடையமைதி அவ. றிடம் இயல்பாக அமைந்திருக்கலால் அந்த இனமுறையி. உறவுரிமை கொண்டாடி மனமறுகி இங்கனம் உரையாடலானா

என்க. இதல்ை அவரது காதலும் நோதலும் காணலாகும்.

நடு இலாதார் என்றது இடை இல்லாதவர் என்ற வா.மு. நடு = இடை. பெண்களுக்கு இடை சுருங்கியிருப்பது ஒர் அழகு ஆதலால் அந்த அழகமைதி சீதையிடம் கலை சிறந்திருக்கது. அதாவது பிடியுள் அடங்கும்படி இடை மிகவும் துணுகி எழில் மிகுந்திருந்தமையான் அவ்வுறுப்பின் சிறப்பை இங்ஙனம் உள்ளி உாைத்தார்.

இந்த இடை வனப்டைப் பல இடங்களிலும், பலவகையிலும், பலர் வாயிலாகவும் காவியத்துள் கம்பர் குறித்திருக்கிரு.ர். இங்கே மாதிரிக்குச் சில தெரிந்துகொள்வோம்.

சீதையின் இடை எழில்

பல்லியல் நெறியிற் பார்க்கும் பாம்பொருள் என்ன யார்க்கும்

இல்லை உண் டென்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார். (பால, கோலங்காண் படலம் 12)

இது கவியின் கூற்று. சீதையின் இடையைப் பாம்பொரு ளோடு இதில் ஒப்புரைத்திருக்கல் அறிக. கடவுளே யாரும் நேரே காணமுடியாமையால் இல்லை என்றும், உலக நிலையைக் கண்டு இதற்கு ஒரு கலைமையான பொருள் இருக்கும் என்று அனுமான அளவையால் யூகமாய் உறுதிசெய்து கொள்ளுகலால் உண்டு என்றும் கடவுளைக்குறித்து உலகினர் உரையாடி வருதல் போல், சீதையின் இடையும் எவர் கண்ணுக்கும் தெரியாமை யால் இல்லை எனவும், மேலும் கீழும் உள்ள உறுப்புக்களின் தொடர்பினுல் நடுவே இடை ஒன்று இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளுதலால் உண்டு எனவும் உரையாடும்படி மிகவும் அருமை யாய் அது உரு அமைந்திருந்ததென்பதாம்.

“இங்கனம் நுண்ணிய இடையுடைய சீதைக்கு மணியணிகள் பல பூட்டி, மலர்மாலைகள் குட்டித் காதியர் மணக்கோலம் செய்த