பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கம்பன் கலை நிலை

ஈயாமாக்கள் = உலோபிகள். அவரது தி மொழி என்பது. இல்லை என்னும் அச்சொல்லைக் கவர்ந்த சிற்றிடை என்க. அதாவது இடை இல்லை என்னும்படி உள்ளதென்பதாம்.

உலோபியர் ஒன்றும் கொடாமல் யாருக்கும் இல்லை என்றே சொல்லிவிடுவர் ஆகலால் அங்கச் சொல்லைப் பெற்றுள்ளது என இடையின் துண்மையைப்பற்றி நளினமாக துவன் றிருக்கும் இதன் நுட்பம் துனித்து நோக்கத்தக்கது.

ஒன்றும் கொடாத உலோபியர்களிடத்தும் இடை ஒன்றைக் கவர்ந்து கொண்டது; அதிலேயும் பொருள் கைவாவில்லை; ஆகவே பொருளை எவ்வழியும் வர் ஈயார் லால் சொல்லையாவது

ரு பும அ 5 கொள்ளே கொள்வோம் என்று முடிவாக அது துணிந்து கொண்

டுள்ளபடியை நம் உள்ளம் உவப்ப இது உணர்த்தி கிற்றலறிக.

மக்கள் என்னது மாக்கள் என்றது அவரது ஈன நிலை தெரிய.

‘’ பல உடம்பு அழிக்கும் பழியூன் உணவினர்

தவமெனத் தேய்ந்தது துடிஎனும் துசுப்பே.’

-- (கல்லாடம் 1)

புலால் உண்பவாது புண்ணியம்போல் ஒரு பெண்ணின் இடை தேய்ந்திருந்தது என்னும் இதை இங்கே ஆய்ந்து கொள்க. துடி =உடுக்கு. துசுப்பு=இடை. உடுக்கு இடையே சுருங்கி இரு புறமும் விரிந்திருக்கலால் மேலும், கீழும் உறுப்புகள் பெருத்து நடுவே துணுகி யிருக்கும் அரிவையர் இடைக்கு அது உவமையாய் வந்தது. இங்கனம் இடைக்கு ஒப்புப் பொருளாய் உரிமை பெற் றுள்ளதுடியைக் குறித்து ஒரு கவி விநோதாசமாக நொடிசொல்லி யுள்ளதை அடியில் காண்க.

துடியை இடையெனவே சொல்லுவேன் ஆனலோ அடியும் பிடியும் அதற் காமெனின் நான் என்செய்வேன் ?

உடுக்கை இடைக்கு நான் ஒப்புச்சொன்னல், அந்த உவமை பொருங்காது ; தவறு சொல்லிவிட்டான் ; ஆதலால் இவனே அடியுங்கள், பிடியுங்கள், கட்டுங்கள்’’ என்று இலக்கணப் புலவர்கள் ஆர்த்து வந்து விடுவர்; அதற்காக அஞ்சி அதனைச் சொல்லாது ஒதுங்குகின்றேன் என இடை நிலையைக் குறித்து உல்லாச சாதுரியத்துடன் இக்கவி சொல்லாடி யிருத்தல் அறிக.