பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கம்பன் கலை நிலை


உழவர் தன்மை இன்னதே என்றது அவர் வயலை நோக்கிச் சென்றதும், அங்கே மயலுழந்து கின்றதும், அயலசைத்து கிரிக் ததும் கினைந்து புன்னகைபுரிந்து வியந்து சொன்ன வாரும்.

இந்தக் கவியில் வந்துள்ள சொல்லையும் பொருளையும் கவர்ந்து கொண்டு ஒர் அணியினை அணிந்து மிகவும் அலங்கரித்து யாரும் இன்புற முன்பு குறித்த கவியைக் கம்பர் நமக்குக் கந்திருக் கிறார் என்பது இங்கே நன்கு புலனும்.

தேவர் வாக்கை எவ்வளவு ஆவலோடு கம் பாவலர் கவனம் செய்துள்ளார் என்பதை இவர் வாக்குகள் யாண்டும் விளக்கி புள்ளன. சிங் காமணி இவர்க்கு ஒர் சிந்தாமணியாயிருந்துள்ளது. மேலே காட்டியுள்ள இரண்டு கவிகளையும் ஒருங்கே படித்துப் பொருள் நயங்களையும், பழமை புதுமைகளின் வளமை இனிமை களேயும் உளமுற ஊன்றி உணர்ந்துகொள்க.

இந்த இருவரையும் பின்பற்றிக் களை பறிப்பு வகையில் பாஞ் சோதி முனிவர் வந்துள்ள வாவையும் பாருங்கள். ‘ கடைசியர் முகமும் காலும் கைகளும் கமலம் என்னுர் :

படைவிழி குவளை என்னுர் பவளவாப் குமுதம் என்னுர் : அடையவும் களைந்தார் மள்ளர் பகைளு ராய் அடுத்தஎல்லே உடையவன் ஆணேயாற்றால் ஒறுப்பவர்க்கு உறவுண் டாமோ?” (திருவிளையாடல், நாட்டுப்படலம் 28). உழவர்கள் வயல்களில் புகுந்து பயிர்க்கு இடையே கிளைக் திருந்த கமலம் குவளே முதலிய மலர்களைப் பறிக்கெறிந்தார். அவை கம் காதலிகளுடைய கண் முகம் வாய் முதலிய அவயவங் களைப்போல் அமைந்திருந்தும் யாதும் கண்ணுேடாமல் அவ்வாறு அகழ்ந்தொதுக்கினர். ஆகவே ஒர் அரசனது ஆணேயைப் பெற் அறுப் போர்க்களத்தில் புகுந்த வீரர்கள் எதிர்த்த படையில் உற வினரிருந்தாலும் உரிமை பாராமல் உடன்று கொன்றே தீர்ப்பர் என்பதை அவ்வுழவர் நிலை உணர்த்தி நின்றது என இதில் நாம் உணர்ந்து நிற்கின்றாேம். இது முழுவதும் கம்பரை அடியொற்றி வந்துள்ளமை அறிக. ‘கடைசியர், மள்ளர், கண், கை, கால், முகம், வாய், கமலம், குவளே முதலிய மொழிகள் யாவும் அவரு டையன என்பது முன்பு வந்துள்ள கவியால் நன்கு உணர்ந்து கொள்ளலாம். அவரது கருத்தை இகமாகக் கவர்ந்துகொண்டு,

அவர் குறித்த வேற்றுப்பொருள்வைப்பு என்னும் அணியையே