பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கம்பன் கலை நிலை

கிலமும் விளைவும் மலரும் மதுவும் என வந்தமையால் மு,ை யே அவற்றின் நலனும் இனிமையும் நன்கு புலனும். இவ் வண் ணம் இனிய பல பொருள்கள் கிறைந்து எல்லா வுயிர்களும் இன் டபுற்றுவாழ அங்நாடு பண்புற்றிருந்த தென்பதாம்.

o விளைவுப்பொருள்கள் அளவுக்கு மீறி யிருந் கமையால் அயல் நாடுகளுக்கும் கடல்கள் வழியாக அத்தேசச் சாக்குகள் அனுப் பப்பட்டன. அப் பண்டங்களைக் கொண்டு போகற்குரிய மாக் கலங்களைக் குறித்துக் கம்பர் உாைத்திருக்கிரு.ர். அவர் கவியைக் காணுமுன்னமே வெறும் கப்பலைப் பற்றிக் கற்பனையாக நமக்குள் நாமே சிந்தித்துப்பார்த்து அந்தச் சிந்தனையில் ஏதேனும் வந்து படுகின்றதா ? என்று ஆராயவேண்டும். அங்ஙனம் ஆய்ந்து நோக்கின், கம்பாது கற்பசைக்கியின் அம்புக ஆற்றலின் அளவு நிலை தெரிந்து உளமிக மகிழ்வோம்.) அவ்வளவு தாம் சிரமப்பட்டுச் சிக்கிப்பானேன் ; கம்பர் கவியையே விாைந்து

பார்த்துவிடுவோமே என்றால், அதுவும் சரி : கண்டுமகிழ்வோம்.

மரக்கலக் காட்சி.

முறையறிங் தவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும் இறையறிந் துயிர்க்கு நல்கும் இசைகெழு வேந்தன் காக்கப் பொறைதவிர்க் துயிர்க்குங் தெய்வப் பூகலம் தன்னிற் பொன்னின் கிறைபஞ் சொரிந்து வங்கம் நெடுமுது காற்றும் நெய்தல்.

(காட்டுப்படலம் 20)

சாக்குகள் ஏற்று மல் நீர்த்துறைகளில் வெறுமையாய் கின்ற மாக்கலங்களைக் குறித்து உரைத்தபடியிது.

கோசல தேசத்திலிருந்து பலவகைப் பண்டங்களையும் கடல் வழியே கொண்டுபோய் மறுபுலங்களில் செலுத்திவிட்டு அவற் றிற்கு | ட தி அங்கிருந்து பொருளையும் பொன்னேயும் அடைந்து மீண்டு வந்து அங்காட்டுத் துறைமுகங்களில் அவற்றை இறக்கி வைத்துவிட்டுக் கம்மிடம் யாதொரு சுமையுமின்றி மாக்கலங்கள் அலைவாய்க் கரைகளில் அமர்ந்திருந்தன ஆதலால் வங்கம் பொன்னின் பாம் சொரிந்து நெய்தல் முதுகு ஆற்றும்’ என்றார், நெய்தல் என்றது கடல் ஒரமுள்ள கரை கிலைகளில் என்றவாறு.