பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கம்பன் கலை நிலை

யாமல் கோளும் குண்டுணியும் சொல்லி இங்காள்போல் நாளும் இழிந்து நவையுற்றாெழிவாா ? காலாயுகக் கொடியுடைய வேலாயு தன் கான் அவர்க்கு வீறுகாவேண்டும். அக்க விய மூர்த்தியைத்

தவிர அயலே யாரை வேண்டுவது ?

முதலிய வேறு ஆறு பெயர்கள் இருக்க அவற்றுள் ஒன்றையும் உாையாஅ இங்கே கோழியை வானம் என்று குறித்தது என்ன? எனின், அதன் ஆதி விர கிலேயின் அமைதி

தெரிய என்க. ) என்னே அது : எனின், பின்னே நோக்குக.

முன்னெரு காலத்தில் இதுபொழுதுள்ள உறையூர் அருகே ஒர் மதயானையைக் கோழி ஒன்று எதிர்த்து அடர்ந்தது. கொதி த்துப் பாய்ந்து கொக்கியடி த்த அகன் அதிர்ப்பை ஆற்றாமல் அந்த யானை அஞ்சி அகன்றது. அதனைக் கண்ட சோழமன்னன் அம்மண்வாசியை வியந்து அங் கேயே கோட்டை யமைத்து நகர் புதுக்கிக் குடி புகுந்து அரசுபுரிந்து வந்தான். அகல்ை அவ்ஆர் கோழியூர் என கின்றது. வானம் என்பது யானைக்குப் பெயர் ஆதலால் அதனே வென்ற விறு தெரியக் கோழியும் வாாணம் என வந்தது. அந்த வீரமான மூலகாரணம் கொனிக்க வாரணம் என்னும் பெயரைக் கம்பர் இதில் காட்டியருளினர். ==

முறஞ்செவி வாரணம் முன் சம முருக்கிய

புறஞ்சிறை வாரனம் புக்கனம் (சிலப்பதிகாரம் 10)

என்னும் இதில் முன் குறித்த வாபனப்போர் வந்துள்ளமை யறிக. முறம்= சுளகு. வாாணம் என்னும் ஒரே பெயரில் யானே யும் கோழியும் தெரிய இதில் அமைத்திருக்கும் அடைமொழி களின் அழகைப் பார்க்க. பெருஞ் செவியனைச் சிறு சிறகன் பொருது வென்றான் என்னும் அருமை நயம் அறிக,

கம்பர் காலத்திற்கு முன்னரே இக்காட்டில் சேவல்போரை மக்கள் ஆவலுடன் ஆற்றிவந்திருக்கின்றார் என்று தெரிகின்றது. பூக்கலை வார னப் போர்த்தொழில் ’’ என்று சிந்தாமணியில் வந்திருக்கலால் முந்தைய நிலைமையும், வெந்திறலாண்மையும் நன்கு புலம்ை. அதில் தேவர் ஆட்டுக்கிடாய்ச் சண்டையையும்

குறித்திருக்கிரு.ர். அப்பாட்டு அயலே வருவது காண்க.