பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கம்பன் கலை நிலை

கைமைகள் யாண்டும் அந்நாளில் அடலமர்ந்து கின்றன. அத ல்ை வில் வாள் வேல் முதலிய படைக்கலப் பயிற்சிகள் எவரிட மும் உயர்ச்சியுற்று வந்தன. ஆடவரே யன்றிப் பெண்டிரும் விாம் பேணி விறல் விளைத்து கின்றார். வித்தும் கிலமும் நல முறின் விளைவும் வளமுடையதாய் விளங்கிகிற்கும்; அதுபோல் தாயரும் கங்தையரும் தறுகண்மையுடையாாய்த் கழைக்கிருந்த மையால் அவர் வயிற்றுச் சேயர்களனைவரும் திடதைரியமுடைய தீார்களாய்ச் செழித்து விளங்கினர்.

தாய் ஒருத்தி வாயுரைத்தது. ‘ ஈன்று புறந்தருதல் என்தலேக் கடனே :

சான்றாேன் ஆக்குதல் தங்தைக்குக் கடனே : வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே : கன்னடை நல்கல் வேங்தற்குக் கடனே : ஒளிறுவாள் அருஞ்சம முருக்கிக், களி றெறிந்து பெயர்தல் காளேக்குக் கடனே’ (புறம் 312) என வரும் இது ஒரு முதுமகள் குறித்தது. இக்குறிப்பால் அங்காளின் ஆண்மை நிலைமைகளும் பெண்மையின் உள்ளப் பான் மையும் உறுதித் திறங்களும் ஒருங்கே உணரலாகும்.

பிள்ளையைப் பெற்று வளர்த்து விடுதல் எனது கடமை ; ஆன்ற கல்வி உதவி அவனைச் சான்றாேளுக்கி உயர்த்துதல் தங் தையின் கடமை; அவன் வீரியம் பெற்று விளங்கக் கூரிய வேலைச் செய்து கொடுத்தல் கொல்லன் கடமை , நல்ல வாழ்க்கையை நல்கி ஆள் வினையிலும் வாள் வினையிலும் அவனே வல்லவனுக்கி வைத்தல் அரசனின் கடமை ; அங்கனம் வைத்த மன்னனுக்கு உற்ற துணையாய்ப் போர்க்களம் புகுந்து பகைவரைத் தொலைத்து யானைகளை அழித்து வெற்றிபெற்றுமீளுதல் அம்மைக்கன்கடமை; என்னும் இந்த அருமைப் பாட்டு இற்றைக்கு ஆயிரத்து எண் னுாறு ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றியது.

அக்காலத்தில் இங்காடிருந்த நிலைமையும், நாட்டு மக்களின் கூட்டுறவும், அரசாட்சியின் ஆதரவும், ஆண்மைத் திறங்களும், அமாாடல்களும், பெண்மக்களின் உள்ளக்கிளர்ச்சிகளும், உறுதி கலங்களும் பிறவும் இதல்ை அறிந்துகொள்ளலாம்.

வேறு ஒன்றையும் குறியாமல் களிறு எறிதல் என்ற கல்ை அவளது உன்னத ஊக்க நிலை யுனாகின்றது. களிறு - ஆண்யானே.