பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கம்பன் கலை நிலை

என்று பாாதமாதாவை நோக்கிப் பரிவோடு கூறியுள்ளமையால் விசமக்களைப் பெற்றுப் பண்டு அவள் விளங்கியிருக்க தலைமையும், இன்றுள்ள நிலைமையும் நன்கு விளங்கும்.

இவ்வாறு வீரத்திறம், வினையாண்மை, விளைவு வளம் வணிக முறை முதலியன நாட்டுக்கணிகளாய் நலஞ்செய்திருந்தமையை இது வரை அறிந்தோம் ; இனி அங்கே பத்துகள் பயின்ற பான்மையும், கலைகள் ஆய்ந்த மேன்மையும் காண்போம்.

பந்தும் கலையும் பயிலுதல். பந்தினை இளையவர் பயிலிடம், மயிலுார் கந்தனை யனையவர் கலைதெரி கழகம் சந்தன வனமல சண்பக வனமாம் நந்தன வனமல நறைவிரி புறவம். (நாட்டுப்படலம் 48)

சந்தனச் சோலைகளிலும் சண்பகக் காவுகளிலும் மடக்கையர் பந்துகள் பயின்றனர் ; மலர்மணங் கமழ்கின்ற நந்தன வனங்களி லும் சுந்தாப் பொழில்களிலும் குமார்கள் கலைகள் தெளிக்கனர் என்பதாம். இங்கே இளையவர் என்றது கருண மங்கையாை.

தொளைபடு குழலினே டியாழ்க்குத் தோற்றன இளையவர் அமுதினும் இனிய சொற்களே. (அ. ந. .181)

எனவரும் இதில் இளையவர் வந்துள்ளமை காண்க.

பந்து ஆடல் என்னது பயில் என்றது. பெரிதும் முயன்று பயின்று அளிதில் தேர்ந்துவரும் அதன் அருமை கெரிய.

இக்காலத்தில் ஆடவர்கள் அடித்துவரும் பந்தடிபோல்வ கன்று அக்காலத்துப் பெண்களின் பந்தாட்டம். இது வெறும் மட்டையடி. காலைக் காலை புதைவது. அது கைக்கிற மிக்கது; அருமைப் பாடு பெரிதுமுடையது. அதன் முறையைக் தெரிய வேண்டும். மூன்று, ஐந்து, அல்லது எழு பந்துகளை இாண்டு கைகளிலேக்கி மாறி மாறி மேலெறிந்து யாதும் கீழே விழா கபடி ஆயிரம் தடவை தொடர்ந்து ஒரே முறையில் அடித்துவிடுவளா யின் அவள் ஆட்டத்தில் செயிக்கவள் ஆவள். அந்த ஆடல்கள் அதிசய நிலையில் அருமையாக ஆடப்பெறும்.

ஒருமுறை வச்சகேசத்து அரசனுடைய அரண்மனை முன் றிவில் அாசிகள் தலைமையில் பங்காட்ட விழா நடைபெற்றது.