பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 149

பந்தாடலில் கைதேர்ந்த சுந்தரிகள் பலர் அங்கே வந்திருந்த மூன்று பந்துகள் எடுத்து முதல் ஒருத்தி ஆடினள். ஐந்து கொண்டு அடுத்தவள் ஆடினுள். அதன் பின் இராசனை என்ப வள் எழு பங்துகளை எடுத்து இன்புற ஆடினுள். அப்பந்துகளின் இயல்பும் அவள் ஆடிய கிறமும் அடியில் வருவன காண்க.

னர்.

இராசனையின் பந்தாட்டம்

‘'வெண்மையும் செம்மையும் கருமையும் உடையன :

தண்வளி எறியினும் தாமெழுங் தாடுவ : கண்கவர் அழகொடு நெஞ்சகலாதன ; ஒண்பங் தோரேழ் கொண்டன ளாகி, ஒன்றாென் ருெற்றி உயரச் சென்றது பின்பின் பங்தொடு வந்துதலே சிறப்பக் கண்ணிமையாமல் எண்ணுமின் ! என்று வண்ண மேகலை வளையொடு சிலம்பப் பாடகக் கான்மிசைப் பரிந்தவை விடுத்தும், குடக முன்கையிற் சுழன்றுமா றடித்தும்,

அடித்த பங்துகள் அங்கையின் அடக்கியும், மறித்துத் தட்டியும் தனித்தனி போக்கியும், பாயிரமின்றிப் பல்கலன் ஒலிப்ப ஆயிரம் கைகளிை அடித்தவள் அகல. (பெருங்கதை, 4-12)

இதில் இசாசன பந்தாடியிருக்கும் திறம் அறியலாகும். இவ்வாறே கத்தம் கைத்திறங்காட்டி அரசிளங்குமரிகள் பலரும் ஆடல்புரிந்தனர். இறுதியில் கோசல தேசத்து அரசன் மகளா கிய வாசவதத்தை என்பவள் இருபத்தொரு பத்துக்களை எடுத்து மேல்வீசி யாவரும் விம்மித மெய்தி வியந்து நிற்ப அற்புதமாக ஆடலாயினுள். அவள் ஆடிய விசித்திரம் அதிசயமிக்கது.

வாசவதத்தை பந்தாடல்.

‘ உகைத்தெழு பங்தின் உடனெழுவனபோல் சுழன்றன தாமம் : குழன்றது. கூந்தல் : அழன்றது மேனி அவிழ்ந்தது மேகலை : எழுந்தது குறுவியர் : இழிந்தது சாந்தம் : ஒடின தடங்கண் கூடின புருவம் ; அங்கையின் ஏற்றும் புறங்கையின் ஒட்டியும், தங்கு, வளத்துத் தான்புரிங் தடித்தும்,