பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் பெருமை

15


இவ்வாறு பெரும்பாலும் மாறுபட்டுத் திரிந்து நின்றாலும் ஆங்காங்கு இந்நாட்டில் உபகாரச் செல்வர்களும், உத்தமக் கலைஞர்களும் இல்லாமல் இல்லை. இருந்துவருகிறார்கள்; இராமலும் இராது; இருக்கவுமுடியாது. இயற்கை அன்னேயின் நியதி அது. அங்ஙனம் இல்லையாயின் இவ்வுலகம் இல்லாது முடியும். “பிறர்க்கென முயலுநர் உண்மையானே, உலகம் உண்டு” என்று பண்டு ஒரு பாண்டியன் கூறிய உண்மையே இன்று ஈண்டு ஆறுதல் தந்துள்ளது.

பயிர்க்குப் பெருமை பயன்படும் இயல்பே. பயனில் களைகள் பழிபட்டழிகின்றன. உற்ற கல்வி செல்வங்களுக்குப் பயன் உணர் வொழுக்கங்களும் உதவி நலங்களுமேயாம். அவற்றை ஆற்றி வரும் அளவே அவை போற்றப்பெறும்; ஆற்றாது அகலின் அவை அவலமாயழியும்.

தம் கல்வி யறிவை நல்வழிப் படுத்திப் பலவகையிலும் உலகினுக்குப் பழம்புலவர்கள் நலம்புரிந்திருக்கிறார்கள். அவருடைய உதவி நலங்கள் அளவிடலரியன. அப்பேருபகாரிகளை நாம் பெரிதும் மறந்திருக்கின்றாேம். விலையுயர்ந்த மணிகள் நிலை தெரியாதவ ரிடம் தலைமயங்கிக் கிடத்தல் போல் அவர் நிலை இலை மறை காயாய் நம்மிடை இருந்து வருகிறது.

பழம் பெருமை கண்ட பொழுது இளஞ் சிறுமை காண நேரும் ஆதலால் அந் நிலைமையை இனிமேல் நாம் உரிமையுடன் சிறிது துருவிப் பார்ப்போம்.

கவிஞர் பெருமை

நம் முன்னேர்களுடைய மனநிலைகளையும் குணநலங்களையும் நாம் ஆர்வமுடன் அறிந்து ஆதரித்து ஒழுகின் அவ்வொழுக்கம் நம்மை ஆதரித்து நமக்குப் பேரின்பம் பயந்தருளும்.

செய்வன தவிர்வன தெரியாது கண் குருடுபட்டுக் கருத்தழிந்து கிடந்த பொதுமக்களுக்கு அறிவொளி காட்டி அருள்புரிந்துள்ள தெருளுடையாரை இருளுடையுலகம் எண்ணாதிருப்பினும் அறிவுடை யுலகம் நன்றியறிவுடன் என்றும் அவரை ஆதரித்து வருவதாம். உலக ஒழுக்கம் அவரது உணர்வொளியால் உயர்ந்து வருகின்றது. நெறிமுறை ஒழுகி வழி வழி உயிர்கள் விழுமிய நிலையில்