பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கம்பன் கலை நிலை

செவ்விய மதுரம் சேர்ந்த கற்பொருளும், சீரிய கூரிய தீஞ்சொல் அம், இத்திவ்விய கவியில் சேர்ந்திருத்தலை ஒர்ந்துகொள்க.

இந்த ஆழ்வாாைப்போலவே மற்ற ஆழ்வார்களும், சங்கப் புலவர்களும் அயோத்தியைப் புகழ்ந்து பாடியிருக்கின்றனர்.

அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி என்னும்

அணிநகரத்து உலகனைத்தும் விளக்கும் சோதி வெங்கதிரோன் குலத்துக்கு ஒர்விளக்காய்த் தோன்றி

விண்முழுதும் உயக்கொண்ட வீரன் தன்னை செங்கனெடுங் கருமுகிலே இராமன் தன்னைத்

தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள் எங்கள்தனி முதல்வனே எம்பெருமான் தன்னை

என்று கொலோ கண்குளிரக் காணும் நாளே. ‘

என்று குலசேகரப்பெருமாள் இங்ானம் கூறி யிருக்கிரு.ர். அயோத்தி என்பதற்கு யுத்தத்தால் உயர்ந்தது என்பதுபொருள். அறிவாலும் ஆற்றலாலும் பிறாால் வெல்லமுடியாத அரியபெரிய அாண் வலியுடையதென்பதாம். “புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல்’ (பரிபாடல் 19) என மதுரையைக் குறித்து நப்பண்ணனர் பாடியிருக்கிரு.ர். அப்படியே அயோத்தியும் போராற்றலில் போாற்றல் வாய்ந்து பெருமிதம் எய்தியுள்ளமையான் அதனுள் வசிப்பவர் எவ்வளவு இளைஞர் ஆயினும் தெவ்வாைவென்று சீர்பெற்று கின்றனர்.

வெள்ளணி அணிந்த ஞான்றே வேந்தர்தம் முடியிற்கொண்ட கள்ளணி மாலைமோந்து கனேகழலிலங்கு நோன்றாட் புள்ளனி கொடியினிைற் போர்பல தொலைத்த ஆற்றல் அள்ளிலை அணிந்த வைவேல் அயோத்தியர் இறையும் வந்தான்.” (சீவகசிந்தாமணி 614)

வெள் அணி = பிறந்த நாளைக்குறித்துக் குழந்தைக்குச் செய்யும் அலங்காாம். அயோத்தி அரசர் இளம்பிராயத்திலேயே எதிரிகளை வெல்வர் எனத்திருத்தக்கதேவர் இதில் உரைத்திருத்த லறிக. புள் = கருடன். கொடியின்ை என்றது திருமாலை.

மலைத் தொகை யன்ன மையணி யானை இலைத்தார் மார்பின் ஏரணி கடக்கைப் பொருந்தா மன்னரைப் புறக்குடை கண்ட அருந்திறற் சூழ்ச்சி அடல்வேற் ருனே அயிர்த்துணைப் பல்படை அயோத்தி அரசன். (பெருங்கதை-3,17)