பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நகர நிலை 171

எனக் கொங்குவேளிர் கூறியிருக்கின்றர். இங்கனம் ரிேய கூரிய தீஞ்சொற் கவிஞர்கள் அயோத்தியைக் குறித்து முன்னரே பாடியிருத்தலால், ‘ கவிஞர் அனைவரும் புகழ்ந்தது.” என அதன் பழம் பெருமையைக் கிளர்ந்து மொழிந்தார்.

வடநூல் முனிவர் என்றது வால்மீகி வசிட்டர் போதாய னர் முதலானவர்களே. அவ்வுலகம் என்றது. பரமபதத்தை. அது நெடுங்காலம் அருந்தவம் புரிந்து அடையத்தக்க அருமை யுடையது ஆதலால், கவம்புரிந்து எறுவான் ஆதரிக்கின்ற அவ்வுலகம் ‘ என்றார், அரிய பெரிய தவத்தால் பெற்றுப் பேரின்பம் நுகர்ந்துவரும் அங்கி வைகுந்தவாசிகளும் அயோத்தி யில் வந்து வசிக்க ஆசைப்படுவார் என்பார் அவ்வுலகத்தோர் இழிவதற்கு அருக்திபுரிகின்றது அயோத்திமா நகரம்” என்றார். இழிதல்=மேலிருந்து கீழிறங்கல். பேரின்ப நிலையில் எறினரை யும் பேராவலுடன் தன்பால் இறங்கி வாச்செய்யும் என்ற இத ல்ை இதனது அதிசய அமைதிகள் புலம்ை.

எதை அடைந்தால் எல்லாம் அடைந்ததாமோ அத்தகைய கிாதிசயமான அந்தமில் இன்பப்பேற்றை அடைந்தவரும் அயோ த்தியை அடைய விரும்புவதற்குக் காரணம் யாது? எனின், அப்பரமபத நாதனை கிருமாலே அப்பதவியைவிட்டு இராமனய் வந்து இதில் அவதரிக்க நேர்ந்துள்ளமையான் என்க.

வைகுந்தத்திலிருந்து செய்ய முடியாத அரிய பெரிய ஒரு காரியத்தை அயோத்தியிலமர்ந்து செய்துமுடிக்க அம்மூர்க்கி ஆர்த்தியுடன் வந்திருத்தலால் இதன் ஆக்கமும் வாசியும் அறிய லாகும். காரிய சித்திக்கு இது வீரியம் பெற்றுள்ளதென்பதாம்.

புரிந்தது என்னுது புரிகின்றது என நிகழ்காலத்தால்கூறிய கல்ை அச்செயல் அன்று கிகழ்வதுபோல் கவி கண்டிருக்கும் ஆர்வக் காட்சி தெரிகின்றது. அருத்தி=ஆசை.

அடுத்த கவியில் இந்நகயை நிலமகள் முகம் என்று கினைந்து உளமிக மகிழ்கின்றார். மகிழ்ந்தவர் அவ்வளவில் அமையாமல் ஆாாமை மீதார்ந்து அழகும் அருமையும் வாய்ந்த பலவகைப் பொருள்களுடன் அதனை எதிர்வைத்து நோக்கி இன்புறுகின்றார். அன்பு கதும்பிய அவரது ஆர்வகிலை எல்லை மீறி உள்ளம் பறிபோ யுள்ளதை அதில் அவர் சொல்லால் அறிகின்றாேம்.