பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நகர நிலை 193

யுடையாாயினும் மேலெழுந்தபடியாய் நூல்களை விரைந்து படிக் கால் பொருள்கள் பெரிதும் விள்ங்கா; மங்காாயினும்ஆழ்ந்து அமர் ந்து நோக்கின் யாவும் நன்கு புலனும்.

“ சிலகாட் பழகில் சிலவும் பலியா ;

பலநாட் பழகிற் பலிக்கும் என்க : விரைவாற் பார்க்கின் தெரியாது ஒன்றும் : விரையாது ஏற்கின் கருகாது என்க. (இலக்கணக்கொத்து)

என வரும் பயிற்சி முறையின் உயர்ச்சி நிலையை உள்ளங் கொண்டு உறுபொருள் தெரிக. (இக் காலத்தில் படிப்பு முறை உள்ளம்படியால் வெள்ளோட்டமாய் ஒடுகின்றது. அதனல் உணர்வு ஒளி மழுங்கி கிற்கின்றது. சிறிதளவு படித்தாலும் கருதிப் பயிலுதல் நலம். படிப்பில் ஆர்வமும் மனவொருமை யும் கல்வியை வளம் பெறச்செய்கின்றன. அவ்வாறே கேள்வியும்; கொஞ்சமாயினும் நெஞ்சம் தெளிவுற நல்லது கேட்கவேண்டும்.

எனைத்தானும் கல்லவை கேட்க , அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் # I என்றது பொய்யாமொழி. பிற அறிஞர்களுடைய உணர்வு நலங்களைக் கேள்வியால் உணர்ந்துகொண்ட பொழுதுதான் ஒருவனுடைய கல்வி யறிவு வளம் பெற்று விளங்கும் ஆதலால் கல்விக்குக் கேள்வி கிளை என வந்தது. கேள்வி இல்லையாயின் கல்வி கிளைகள் இல்லாத கனிமரம் போல் பொலி விழந்து கிற்கும் என்பது புலயைது.

செவியால் கேட்கப்படுவனவெல்லாம் கேள்வி ஆயினும் ஈண்டு நல்ல அறிவின் பதிவையே அது குறித்து கின்றது.

‘ மறவுரையும் காமத் துரையும் மயங்கிப்

பிறவுரையும் மல்கிய ஞாலத்து-அறவுரையைக் கேட்கும் திருவுடையாரே. பிறவியை மீட்கும் திருவுடையார், “ (அறநெறிச்சாரம்)

இதல்ை இன்னதுதான் கேள்வி என்பது இனிது புலனும்,

இத்தகைய கல்வி கேள்விகள் வாய்ந்து மனநலமுடையணுய் கல்வினைகளைச் செய்யின் அது தவமாம். அத் தவவொழுக்கம் மனிதனேப்புனிதப்படுத்தி மிகவும் உன்னத நிலையில் உயர்த்தும்; தன்னளவில் உயர்ந்துள்ள அவன் எல்லா உயிர்களும் இன்புறும்

25