பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கம்பன் கலை நிலை

என்றது பொய்யாமொழி. (எய்யா விளைவும், பொய்யா மழையும் அாச திேயின் பலன்களாம் என்பதை இதல்ை அறிக் தோம். நீதி மன்னவனுக்கு வானும் கிலனும் ஒருங்கே வளஞ் சுரங்தருளும் என்பது கருத்து.)

‘’ இருவானம் பெயல் ஒளிப்பினும், வரும்வைகல மீன் பிறழினும், வெள்ளம் மாருது விளையுள் பெருக புள்ளிமிழ்க் தொலிக்கும் இசையே (மதுரைக்காஞ்சி)

நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் ஆண்டு வருங் காலத்தில் இங்காடிருந்த நிலைமையைக் கூறியபடியிது. வானம் பொய்ப்பினும் தானம் பொய்யாமல் கோன் நீதி குடிகொண் டிருக்க தென்பதாம். வெள்ளமும், பறவையும் இதில் வந்துள்ள மை காண்க. நலமுடைய அரசால் வளம் மிகுந்திருந்த தென்க.

மைம்மீன் புகையினும் தாமம் தோன்றினும் தென்திசை மருங்கின் வெள்ளி ஒடினும் வயலகம் கிறையப் புதற்பூ மலர மனேத்தலே மகவை யீன்ற அமர்கண் ஆமா நெடுகிரை கன்புல் ஆரக் கோஒல் செம்மையிற் சான்றாேர் பல்கிப் பெயல் பிழைப் பறியாப் புன்புலத்ததுவே ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே.” (புறம் 117)

இது, பாரியைக் குறித்துக் கபிலர் பாடியது.

தாமகேது முதலிய தீய கோட்கள் ஆகாயத்தே தோன் றினும், வடதிசை வெள்ளி நிலைமாறிக் கென்திசை இடினும், மழை மாருது பெய்ய, வயல்கள் நிறைந்து விளைய, புதல்கள் எங்கனும் பூக்கள் மலா, நாடு வளம் பெற்று நல்லோர் பல்கி யிருந்தனர்; அதற்குக் காரணம் அவனது செங்கோலே என்ப தாம். இனிய புல்லை கிறைய மேய்ந்து பசுக்கள் பெருகி கின்றன என்ற கல்ை இதன் கண் விலங்கு வந்தது காண்க.

அாசன் நீதிமானப் கின்று செங்கோல் செலுத்திவரின் அவன் காடு வெள்ளம் குன்றாது விளங்கி கிற்கும்; புள்ளும்