பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கம்பன் கலை நிலை

மன்னன் குடையைச் சந்திமனேடு ஒப்பவைத்துஎண்ணி அதனி னும் இது சிறந்த நலனுடையதென்று கூறியபடியிது.

விண்ணில் நின்று நிலவைப் பொழிந்து இருளை நீக்கி எல்லா உயிர்கட்கும் மதி மகிழ்ச்சியைச் செய்துவரும் ; இது, மண்ணில் கின்று அருள்நீதிகளை எங்கும் பாப்பிப் பகை பழிபாவம் முதலிய கொடிய இருள்களை அடியோடு நீக்கி எவ்வுயிர்க்கும் இன்பம் புரிந்துவரும். உயிர்களுக்கு உவகையை விளைத்துவருவதில் பொதுவாக இவ்வாறு இரண்டும் நிறையொத்திருப்பினும் சில குறைகள் மதியினிடம் மருவியுள்ளன.

அது சில காலம் தேயும் ; சில காலம் வளரும் ; ஒரு சமயம் அடியோடு மறைந்தும்போம். அங்கனம் மறையாமல் பூரணமாக கிறைந்திருப்பினும் இாவில்மட்டும் சிறிது ஒளி செய்து புற இருளை நீக்கிப் பகலில் உரு ஒழிந்துபோம். இது என்றும் ஒரு படியே நின்று யாண்டும் யாதொரு குறையுமின்றிப் பகல் இரவு எப்பொழுதும் நீதி ஒளி வீசி உலகுயிர்களின் உள் ளும் புறனும் ஒரு தீதும் சேராமல் உரிமையுடன் பேணிவரும். இங்கனம் அருமைப் பண்புகள் பல அமைந்து ஆருயிர்க்குப் பேரின்பம் புரிந்துவருதலால் விண்ணிடை மதியினே இது மிகை என உலகம் எண்ணும்படி அண்ணல்தன் குடைமதி அமைங் திருந்ததென்க. --

(தசரதனுடைய வெண்கொற்றக்கொடை விண் மதியினும் சிறந்து மண்ணில் ஒரு அதிசயமான புதிய மதியாய்க் தண்ணிழல் பசப்பி இன்னளிபுரிந்து இனிமை பயந்து யாவரும் துதி செய்யத் தேவரும் புகழத் திகழ்ந்திருந்ததென்பது கருத்து.)

வடிவம் நிறம் பண்புகளால் சந்திரனை ஒத்தெண்ணப்பட் டுள்ள குடை பயன் அருளுதலில் அதனினும் மிஞ்சி மிகவும் வியனிலையுற்றிருந்தது என்ற இதல்ை மன்னன் ஆட்சியில் மன் லுயிர்கள் மகிழ்ச்சியெய்தி யுள்ளமை நன்கு புலம்ை.

அரச நீதியின் அருளமைதியைக் குடைமேல்வைத்து இவ் வாறு கூறியருளினர். சச்சந்தன் குடைநிலையைக் குறித்துத் திருத்தக்கதேவர் கூறியுள்ளதும் இங்கே அறியத்தக்கது.