பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கலை நிலை


தனையில் எதேனும் வந்துபடுகின்றதா ? ஒன்றும் இல்லை என்று - தான் வருகிறது. நம் நெஞ்சு நின்ற நிலையிலேதான் நிற்கின்றது. ஆனால், பஞ்சகாவியங்களுள் ஒன்றாகிய சீவக சிந்தாமணியில் உழவு காளைகளைக் குறித்து ஒரு கவி வந்துள்ளது; அதில் அவற்றைக் கானும் பொழுது உள்ளம் வியந்து உவகை மீக் கூர்கின்றது. அந்தப் பாட்டின் பகுதியை இங்குக் கொண்டுவந்து காட்டுகின்றேன்; அக் காளைகளின் உருவம் செயல் அன்பு உள்ளப் பண்பு முதலியவற்றை எவ்வளவு அழகாக அது உணர்த்தி நிற்கின்றது என்பதை நீங்கள் கொஞ்சம் ஊன்றிப் பாருங்கள்.

உழவு காளைகள்

“மாமனும் மருகனும் போலும் அன்பின;
காமனும் சாமனும் கலந்த காட்சிய.”

(சிந்தாமணி-நாமகள், 14)

எனவரும் இதில் அவ்வுழவெருதுகளின் உருவும் உள்ளமும் மருவியுள்ளன. புறநிலையும் அகநிலையும் பொருந்த விளக்கி அன்பு மணம் கமழ, அறிவுநலம்திகழ, ஆர்வம் விளைத்து நிற்கும் இக் கவியின் அருமை கருதத்தக்கது. இனிமை கனிந்த இதன்சொல் லொழுக்கும், பொருளமைதியும் உள்ளுந்தோறும் உணர்வு விரிந்து உரிமைமிகுந்து பிரியம் பெருகுவதாம்.

உலகத்தில் தாய் அன்பு சிறந்தது. ஆதலால் அதனை ஈண்டு ஒப்புச்சொல்லாதது என்னை? எனின், இங்கே ஒன்றி நிற்கின்ற இரண்டும் ஆண்கள் ஆதலால் அது இசையாது நின்றது. தந்தையும் மைந்தனும்போல, அண்ணனும் தம்பியும்போல, குருவும் மாணவனும் போல, என அண்பகுதிகளுள் வேறு ஏதேனும் ஒன்றை உரைக்கலாகாதோ? எனின், ஒன்றின் நின்று ஒன்று தோன்றாமை யானும், ஒரே வயிற்றில் பிறவாமையானும், பருவங்கள் ஒவ்வாமையானும், அவை பொருந்தாவாயின என்க.

ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்தில் தோன்றிப் “பெண்ணைக் கொடுத்தாயோ, கண்ணைக்கொடுத்தாயோ” என்றபடி உண்ணிறை அன்பிற்கு உரிமையான மகட்கொடை ஒன்றால் மருவி ஒத்த பிரியத் துடன் ஒருவரை ஒருவர் உள்ளுற அவாவி ஒருமையுற்றிருத்தலால் அந்நிலையில் இருவேறிடங்களிலிருந்து தேர்க்தெடுத்து இணைக்கப்