பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியின் பெருமை

27


பட்டுப் பிணைப்புற்றுள்ள இணை எருதுகளுக்கு உரிமையான உவமையாக மாமனும் மருகனும்இங்குக் கருத நின்றனர். இது ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றிய கவி. மாமன் மருகர்களுக்கு அன்றிருந்த உரிமை நிலையை இன்றும் உணர்த்தி இது குன்றாது நிற்கிற்கின்றது.

“அப்பன் நீ அம்மை நீ” என்ற தேவாரப் பாசுரத்தில் அன்புடைய மாமனும் நீ என்று இறைவனைச் சுட்டியிருக் கின்றது. அப்பாட்டில் அப்பன், அம்மைகளுக்கு யாதும் அடைகொடாமல் மாமனுக்கு மட்டும் அன்பு விசேடம் கொடுத்தது அவர்கள் இயற்கையாகவே உரிமையான போன்புடையவர்கள் ஆகலின் அது சொல்லவேண்டாதாயிற்று, மாமன் அன்பு செயற்கையானது ஆதலால் அதனை விதந்து சொல்ல நேர்ந்ததென்க.

மாமன் அன்பிற்கு ஒர் மாண்பு இந்நாட்டில் இருந்து வருதல் இவற்றால் தெரிந்து கொள்ளலாம். சாமன்= காமன் தம்பி.

உலக இயல்புகளை விளக்கி, உயிர்நிலைகளை மாட்சிமைப் படுத்தி நாம் ஆவலுற்று நோக்கும்படி கவிகள் எவ்வளவு காட்சியளிக்கின்றன. உள்ளமைந்த அன்பே ஒற்றுமைக்கும் உயர்நிலைக்கும் காரணமா புள்ளது. அன்புடைமையால் மாடுகள் கூட மாட்சிமையடைகின்றன. அத்தகைய அன்பை இழந்துவிடுவரேல் மக்களாயினும் மாக்களினும் கடையாய் மாண்பிழந்து படுவர் என்பது இதில் தொனிக்குறிப்பாம்.

சாமானியமான பொருள்களையும் அழகுறுத்தி உயர்ந்த நோக்கத்தோடு உயிர்களுக்கு இனிமையாகக் கவிகள் எவ்வாறு உணர்த்துகின்றன என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டாக இது இங்கே காட்டப்பட்டது. இது போல்வன பல உள்ளன.

ஒரு மாட்டுப் பாட்டே இங்ஙனம் நம் உள்ளத்தைக் கவர்ந்து உவகை விளக்குமானால் வேறு உயர்ந்த கவிகள் எவ்வாறு நம்மை வசப்படுத்தி இன்புறுத்தும் என்பது இதனால் சிறிது அறியலாகும்.

நமது மொழியில் விளைந்துள்ள கவிகள் பெரும்பாலும் மறுமை நோக்கோடே மருவி யிருக்கின்றன.

மனிதனைப் புனிகப்படுத்தி உன்னத நிலையில் உய்ப்பதே உத்தம கவிகளின் நோக்கமாகும். மனிதன் இன்பத்தை விரும்புகிறான்;