பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

கம்பன் கலை நிலை


துன்பத்தை வெறுக்கின்றான். விரும்பியன பலவும் விலகிப்போகின் றன; வெறுப்பன பெரிதும் விரைந்து எதிர் வருகின்றன. தான் கருதியபடி கைவராமையால் மனிதன் கலக்க முறுகின்றான். இங் ஙனம் எண்ணியன எண்ணியாங்கு எய்த முடியாமல் ஏங்கி யுழல் கின்ற மக்களுக்கு உறுதியான நலங்கள் உள்ளியவாறே உளவாகும் உபாயங்களைக் கவிகள் உரிமையுடன் நின்று இனிமையாக உணர்த்தி யருள்கின்றன.

இவ்வாறு இன்ப நலங்களை இதமாக என்றும் உதவி வருதலால் கவிகள் கற்பகங்கள் எனவும், காமதேனுக்கள் எனவும் விழைந்து வியந்து போற்றப் பெறுகின்றன.

கவியானது உலக இயற்கைகளை அழகுறக் காட்டும் ஒர் அற்புதக் கண்ணாடி போல்வது. இறந்த காலம் என்னும் பரந்த திரையால் மறைந்து போயுள்ள நம்முன்னேர்களுள் எவ்வளவோ புண்ணிய புருடர்களைக் கவிப்படங்கள் நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகின்றன. உருவப்படத்தினும் கவிப்படம் மிகவும் சிறந்தது. அதில் ஒருவனது உடல் நிலையைமட்டும் குறிப்பாகக் காணலாம். கவிப்படத்திலோ மனிதனுடைய உருவம் பருவம் குணம் செயல் நடை உடை பழக்கம் வழக்கம் பான்மை மேன்மை முதலிய அனைத் தையும் நாம் உடனிருந்தவர்கள் போல் தெளிவாகக் கண்டு உளமிக மகிழ்கின்றாேம். புவியில் நேரே காணாதவர்களையும் கவியில் காண் கின்றாேம். அதில் யாரைக் காண்கின்றாேமோ அவரோடு நெருங்கிய பழக்கமுடையவர்களாய் நாம் ஆகிவிடுகின்றாேம். கவி ஒரு வீரனைக் கொண்டுவந்து காட்டுங்கால் நமக்கு வீர உணர்ச்சியை ஊட்டி விடுகின்றது. அதில் ஒரு வள்ளலைக்காணும் பொழுது உள்ளம் உருகி எல்லாருக்கும் உதவி செய்யவேண்டும் என்று தோன்றுகின்றது. கன்னன் குமணன் பாரி ஓரி ஆய் நள்ளி முதலிய வள்ளல்களைக் காட்டி வண்மையுணர்வை விளைத்துப் பிறர்க்கு உதவிசெய்யும் பெற்றியைக் கவிகள் நம் உள்ளங்களில் உரிமையாக வளர்த்தருள்கின்றன.

கவிகளைக் கருத்துான்றிப் படிக்குங்கால் நம்மை யறியாமலே வியக்கின்றாேம்; சிரிக்கின்றாேம்; அழுகின்றோம் அளிபுரிகின்றோம்; களி மிகுகின்றாேம் ; அருளுறுகின்றாேம் ; வீராவேசம் கொள்ளுகின்றோம்; அன்பு கனிகின்றாேம்; இன்பம் நுகர்கின்றாேம்;