பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 கம்பன் கலை நிலை

உலகமே தெரியாமல் பாகிலையில் பதிந்து தனியே இருந்த இம்மாதவரை மாதர் நயமாக அழைத்து வந்ததும், நாட்டுள் வா மழை பொழிந்ததும், உரோமபத மன்னன் உவந்து போற்றி அாச வுபசாாத்துடன் இவரை அரண்மனையில் வைக்கிருந்ததும், பின்பு தனது அருமைக் கிருமகளாகிய சாக்கையை இவர்க்குக் தாரை வார்த்துக் கந்ததும், பேரழகியான அவளோடமர்ந்து சுகபோகங்களை நுகர்ந்து இவர் க்கிக்கிருந்ததும், துறவுநிலை துறந்து இல்லற வாசியாயின்புற்றிருப்பினும் அருந்தவரெவரினும் சிறந்த பெருக்ககை என இவரை வசிட்டர் மதிக்கிருந்ததும், இவாைக் கொண்டே கம் மன்னன் கவலையை மாற்றவேணடும் என்று உணர்ந்து துணிந்ததும், அவரது உரைவழியே கசாகன் இவரை அழைக்கப்போனதும், உரோமபதன் பணிந்து உபசரித்து உறுதி கூறி முதலில் மன்னனே அனுப்பிவிட்டுக் கனியே போய் முனிவரை வேண்டி நயமாக அயோத்திக்கு அனுப்பிவைத்ததும், மாதவர் வந்ததும், அவரை வணங்கி வாழ்த்தி அரசன் உபசரித் ததும், அரசவையில் குலகுருவுடன் அவர் அமர்ந்திருந்ததும், சக்காவர்த்தியும் அவரும் உள்ளங் கனித்து உரைகள் ஆடியதும் ஆகிய இச்சம்பவங்கள் கம்பர் காட்டும் காட்சியில் அறிவு நலங் கள் சுரங்து எங்கும் அழகும் இன்பமும் கிறைந்துள்ளன.

தம் அரசுக்கு ஒரு வழிமுதல் வேண்டுமே என்று வேந்தன் வேண்ட, அதற்கு வசிட்டர் பதில் உாைக்க, அதில் -கிளைத்த ஒரு இனிய கிளையாய் இக்கதை எழில் மிகுந்து எழுந்தது.)

தண்ணளி, தவம், அரசமரியாதை விநயம் முகவிய உயரிய இயல்புகளைக் கவி இதில் மிகவும் நயமாக விளக்கியிருக்கிரு.ர்.

இவ்வண்ணம் முகமனுக எதிர் எதிர் உவகையுரையாடியபின் முனிவர் அரசனை நோக்கி, “என்னை அழைத்துவந்தது எதற்காக ? யாகம் செய்யத்தானே ? என்றார். மன்னன் வியங்கான். மலாடி பணிந்தான். பின்பு சொன்னபடியைக் கவியில் காண்க.

தசரதன் சொன்னது ‘ உலப்பில்பல் லாண்டெலாம் உறுகண் இன்றியே

தலப்பொறை யாற்றினேன் தனையர் வந்திலர்; அலப்ஸ்ரீர் உடுத்தபார் அளிக்கும் மைந்தரை கலப்புகழ் பெறவினி நல்கல் வேண்டுமால். ‘