பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 கம்பன் கலை நிலை

போது விரிந்திருந்த அரசர்களுடைய கைகளாகிய தாமரைகள் கண்டவுடனே குவிந்து கின்றன ; ஆதலால் மற்றாெரு கதிரோன் என்றார். இவ் வுருவகக் கால் இவனது திருவின் பெற்றியும் தேசம் கெரியலாகும்.)இாதாரூடய்ை மிதிலை நோக்கி இவன் செல்லும்பொழுது உடன் கிகழ்ந்து சென்ற காட்சிகள் பெரு மாட்சிமைக ளுடையனவாய் வியப்பும் விம்மிகமும் விளேத்து கின்றன. சில அடியில் வருவன காண்க.

தசரதன் மிதிலை சென்ற வைபவம். “ சங்கமும் பணையும் கொம்பும் தாளமும் காளத்தோடு மங்கல பேரி செய்த பேரொலி மழையை ஒட்டத், தொங்கலும் குடையும் தோகைப் பிச்சமும் சுடரை ஒட்டத், திங்கள் வெண் குடைகண் டோடத் தேவரும் மருளச்சென்றான். மந்திர கீத ஒதை, வலம்புரி முழங்கும் ஒதை, அந்தணர் ஆசி ஒதை ஆர்த்தெழு முரசின் ஒதை, கங்துகொல் களிற்றின் ஒதை, கடிகையர் கவிதை ஒதை, இந்திர திருவன் செல்ல எழுங்தன திசைகள் எல்லாம். (2)

நோக்கிய திசைகள்தோறும் தன்னையே நோக்கிச் செல்லும் வீக்கிய கழற்கால் வேங்தர் விரிந்தகை மலர்கள் கூப்பத் தாக்கிய களிறும் தேரும் புரவியும் படைஞர்தாளும் ஆக்கிய துாளி விண்ணும் மண்ணுல காக்கப் போனன். (3)

(எழுச்சிப்படலம் 78-80)

மேலே வந்துள்ள இங்க மூன்று கவிகளையும் கண்னு ன்றி நோக்கவேண்டும். இராச கம்பீரங்கள் எவ்வளவு அதிசயங்களை யுடையனவாய் இவற்றுள் குதிகொண்டு நிற்கின்றன. கவியின் மானசக் காட்சியில் தோன்றிய கோற்றங்கள் யாவும் அவர் வாக் கில் ஒளிபெற்று வந்து நம்முடைய உள் ளங்களில் தெளிவாய் எழில்பெற் ருெளிர்கின்றன. இந்திர திருவன் என்று நம் மன்ன லுக்குச் சுந்தரமான பெயரை இங்கே தந்திருக்கின்றார். ஒசை யும் பொருளும் உட்கருத்துகளும் இவற்றுள் உணருந்தோறும் உவகையும் வியப்பும் ஒருங்கே விளை க்து உணர்ச்சி நலம் சுரக்

துளளன.

யானே குதியை முதலிய நால்வகைச் சேனைகளம் பல்வகைக் குழாங்களும் கடந்து செல்லுங்கால் இப் பூமியிலிருந்து மிடைக்