பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 355

பரத சத்துருக்கனர் எழுந்தது. பொருகளி றிவுளி பொற்றேர் பொலங்கழற் குமரர் முந்நீர் அருவரை சூழ்ந்த தென்ன அருகுபின் முன்னும் செல்லத் திருவளர் மார்பர் தெய்வச் சிலையினர் தேரர் வீரர் இருவரும் முனி.பின் போன இருவரும் என்னப் போர்ை.”

(எழுச்சிப்படலம் 71, 72)

(குலகுருவும், குமாரும் புறப்பட்ட சீர்மையைக் குறித்து வங்கிருக்கும் இக்கவிகளைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். பாக்கிாங்களுக்குத் தக்க வார்த்தைகளை வழங்கிப் பார்த்தவரெ வரும் வியந்து மகிழ ஒளியும் உணர்வும் கொடுத்துக் கவி அவற்றை வெளிவிடுகின்றார். ஒரு சிறிய நிகழ்ச்சியைச் சொல்லுருவில் தீட்டி நம் உள்ளம் பதித்து உணர்வை விளக்கி உவகை விளைத்து வரும் கவியின் அற்புத சக்தி அரிய கலையின் தத்துவ நிலையமா யுள்ளது. பதங்கள் தோறும் குறிப்புப்பொருள்கள் பதிந்து கிடக்கின்றன. உணர்ந்து மகிழவேண்டும்.)

இப்பொழுது வசிட்டர் பின் செல்லும் பாத சத்துருக்கன ருக்கு முன்பு விசுவாமித்திார் பின் சென்ற இராம இலக்குவரை ஒப்புரைத்திருக்கும் நயம் உரிமை கனிந்து உவகை சுரந்துள்ளது. இவ்வண்ணம் உரிமையாளானைவரும் சென்றபின் இறுதி யில் அாசன் எழுந்தான். அவ் எழுச்சி வியக்ககு நிலையில் விளங்கி கின்றது. தனது அருமைக் கிருமகனுக்கு நன்மை யுண்டாகும்படி தெய்வத்தைச் சிந்தித்துத் தானங்கள் LI a சொரிந்து நல்ல ஒரையில் அவன் எழுந்தருளின்ை. அரிய ஆடம்பரங்களுடன் வெளிவந்து அழகிய இாகத்தில் அவன் எறும்பொழுது புடை சூழ்ந்து கின்ற அரசானே வரும் உரிமை யுடன் தொழுது உவந்து போற்றினர். மற்ற மன்னவர் கை கூப்பிக் கத்தம் வாகனங்களில் சார்ந்து வர இந்த வெற்றி வேல் வேந்தன் கேர் ஏறிச் சென்றான். அந்த அற்புதக்காட்சி யைக் குறித்துக் கவி ஒரு கற்பனை செய்திருக்கிரு.ர். ‘ கொற்றவேல் மன்னர் செங்கைப் பங்கயக் குழாங்கள் கூப்ப மற்றாெரு கதிரோன் என்ன மணிநெடுங் தேரில் போன்ை.

என்னும் இதில் தசரதன் குரியைேடு நேர் எண்ணப் பெற் மறுள்ளான். கதியோனைக் கண்டவுடன் காமரை மலர்கள் விரி

யும் ; காணுதபொழுது குவியும் .; இக்கக் கதிரோனைக் காணுத,