பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 367

இயற்கை கிகழ்ச்சிகளில் கவியின் இருதயம் புகுந்து வேலை செய்யும் திறங்கள் மிகவும் அதிசயமாயுள்ளன.

அவர் கருதிய கருத்துகள் சொல்லுருவில் வெளி வந்து எல்லையில்லா இன்பங்களே மன்பதைக்கு என்றும் இனிது உதவி வருகின்றன. அவ்வாவில் உணர்வு நலங்கள் ஒளிபெற்று உயர் கின்றன.)

1. வாசகம் வல்லார் முன்கின்று யாவர் வாய் திறக்கவல்லார்? 2. வஞ்சிபோல் மருங்குலார் மாட்டு யாவரே வணங்கலாதார்?

3. புதியன கண்டபோழ்து விடுவரோ புதுமை பார்ப்பார் ?

(எ ன்னும் இம்மூன்று வாசகங்களும் உலகம் தெளிந்த பழ மொழிகளாய், வேற்றுப் பொருள் வைப்பு என்னும் அணிநலம் அமைந்து, மேலே வந்துள்ள மூன்று கவிகளிலும் முதல் மூன்று அடிகளில் குறித்துள்ள பொருள்களை முறையே ஆதரித்து, ைது ைவ வலியுறுத்தி இனிது விளக்கியுள்ளன.”

_

உலக அனுபவங்களைப் புலவர் வாயிலாகக் காணும்பொழுது அவை புதுமையும் இனிமையும் பொருங்கி மிளிர்கின்றன.

I கண்ணும்பூச்சி என்னும் விளையாட்டு-ஒன்று பண்டுதொட்டு இன்றும் இக்காட்டில் கிகழ்ந்து வருகின்றது. இளஞ்சிரு.ர்கள் இதனே விரும்பி விளையாடுவர் ஆயினும் காதலர்களிடையே இது மிகவும் கனிந்து விளங்கும்.)

மறைவாகப் பின்னே வந்து ஒருவர் கண்ணேப் பொத்திக் கொண்டு மற்றாெருவர் வாய்பேசாது கிற்பர். பொத்தப்பட்ட வர் பொத்தி நிற்பவர் இன்னரென்று இனந்தெரிந்து சொல்ல வேண்டும் சரியாகச் சொல்லிவிடின் ஆட்டத்தில் வென்றவாா வர் ; கவருயின் ஏமாந்தார் என்று அயலவர் இகழ்ந்து சிரிப்பர்.

செல்லமான இந்த உல்லாச ஆடல் பூக்கொய்து உலாவி வருகின்ற பொழுது காதலர்களிடையே ஆதாவுடன் நிகழ்ந்தது. அந்தக் காடசியை அடியில் வரும் கவிப்படத்தில் காண்க.