பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 கம்பன் கலை நிலை

பங்குனி மாதம் உத்தா நாளில் காலையில் திருமணச்சடங்கு கள் தொடங்கினர். கலியான மண்டபம் தேவரும் வியப்பம் திவ்விய நிலையில் சிறந்திருந்தது. அரச குழாங்கள் நெருங்ெ யிருந்தனர். வசிட்டர் விசுவாமித்திார் முதலிய முனிவர்க ளோடு கசாகன் அங்கே இனிதமர்ந்திருந்தான். மணமக்கள் இருவரையும் தனித்தனியே வைத்து அலங்கரிக்கலாயினர். குறிக்க காலம் வாவும் சீதையை அழைத்துவரும்படி சனகனி டம் வசிட்டர் பணித்தார். இளங்குமரிகள் புடைசூழ அந்த எழிலுருவம் வந்தது. சனகியைக் கண்டவுடனே அனைவரும் வியந்து, ‘ இது கெய்வத்திருவே ! ‘என்று மெய்ம்மறந்துதொழு கார். மாதவர் புகழ்ந்தார். வசிட்டர் மகிழ்ந்தார். தனக்கு வாய்த்துள்ள அருமை மருமகளைக் கண்டபொழுது கசாதனுக்கு உண்டான மகிழ்ச்சி அளவிடலரியது. அவன் கொண்ட உவகை கிலையை அடியில் வரும் கவியில் காண்க.

தசரதன் சனகியைக் கண்டு உவகை மீக்கொண்டது. “ துன்று புரி கோதையெழில் கண்டுலகு சூழ்வங்து

ஒன்று புரி கோலொடு தனித்திகிரி யுய்ப்பான் என்றும் உலகேழும் அரசு எய்தியுளன் ஏனும் இன்று திரு எய்தியதே என்வயம தென்றான். ‘

(கோலங்காண் படலம், 33) மன்னர் மன்னவனுய் உலகமுழுவதும் அரிய பெரிய கிரு வினை இதற்குமுன் நான் அடைங்கிருங்காலும் இன்று கான் உண்மையான உயர் கிருவை எய்தப் பெற்றேன் என்று கசாகன் இதில் மனமிக மகிழ்ந்து வாய்கிறந்து மொழிந்திருக்கின்றான்.

மன்னனது இம் மகிழ்ச்சி மணமகளின் மாட்சியை விளக்கி நிற்கின்றது. காட்சியுற்றபோதே கருத்தில் உண்மை இங்ானம் கனிந்து தோன்றியது.

(எல்லாச் செல்வங்களுக்கும் அதிதேவகையான கிருமகளே தனக்கு மருமகளாய் வந்திருக்கலால் அங்கப் பரமபாக்கிய கிலே யை வியந்து, ‘ இன்று திரு எய்தியது ‘என்று கன்னேயறியாமலே

மன்னன் இன்னவா.வ அதிசய பாவசனுய்ச் சொன்னுன் என்க.)

நல்ல உத்தம இலக்கண முடையவள் ஒருவனுக்கு மனைவி. யாக வாய்க்கப் பெற்றால் அவன் சீரும் செல்வமும் பெற்றுப்