பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கம்பன் கலை நிலை

4. கிட்கிந்தா காண்டம் குளிர்பூஞ் சோலைகள் புடைசூழ இனிய நீர்வளம் கிறைந்து தனியமைந்திருந்த பம்பைத் தடாகத்தில் நீராடிக் கனி காய் கிழங்குகளை யுண்டு அன்றிரவு தங்கி மறுநாள் காலையிலெழுந்து கம்பி யுடன் இராமர் ருசியமூகம் என்னும் மலைச்சாரல் வழியே நடந்து சென்றார். அங்கே சுக்கிரீவன், நீலன், குமுதன் முதலிய வானார் கள் இவரைக்கண்டு வாலி ஏவலினுல் வருகிறார் என வெருவி மறுகி ஒடி ஒர் மலை முழையுள் ஒதுங்கினர். அவர்களை அனுமான் தேற்றி யிருத்திவிட்டுக் கனியே இவர் முன்வந்து வணங்கி கின்றான். அவனைக் கண்டதும் இராமர் நீ யார்?’ என்றார். அவன் இனிமையாகவும் தெளிவாகவும் மிகவும் விநயமாகப் பதில் சொன்னன். வழுவின்றி உழுவலன்புடன் உரைத்த அவனது இனிய மொழிகளைக்கேட்டு இராமர் பெரிதும் வியந்து எல்லாக் கலைகளிலும் அவன் வல்லவன யுள்ளமையை அச் சொல்லால் அறிந்து அவனைச் சொல்லின் செல்வன் ‘ என்று புகழ்ந்தார். பின்பு அவன் மூலமாகச் சுக்கிரீவன் நட்பாயினன். அவ் வானா மன்னன் வாலியால் துயருற்றிருக்கும் நிலையை உரிமையுடன் அதுமான் உருக்கம் தோன்ற வுரைத்தான்.அவ்வுரைகளைக் கேட்டு இராமர் உள்ளம் உருகினர். கள்ளரிய வலியினயிைனும் அப் பகைவனேவென்று உதவி செய்வல்’ என்று உறுதி கூறிக், தமது அரிய திறல் நிலையை அவர் ஐயம் தெளிய மாமாங்களே எய்து காட்டி வாலியை வென்று சுக்கிரீவனுக்கு அரசுரிமை நல்கி வானாங்களே இராமர் படைத் துணையாக அமைத்துக் கொண் டார். வானா விார்க ளனைவரும் போன்புடன் இாாமரைப் பேணி கின்றார். கார்காலம் கழித்து நான்கு மாதங்களில் வருவ தாகச்சொன்ன சுக்கிரீவன் அரசபோகங்களில் ஆழ்ந்து மதிமயங்கி யிருந்தான். அதனை கினைத்து இராமர் முதிர் சினங்கொண்டார். இளையவன் போய்த் தேற்ற அவன் எழுந்து வந்து இாாமரை வணங்கிப் பிழை பொறுக்க வேண்டினன். பின்பு உழையிருந்த சேனைகளைப் பல இடங்களிலும் போய்ச் சீதையைத் தேடிவரும் படி அனுப்பினன். இாண்டு வெள்ளம் வானாங்களுடன் தென் திசை நோக்கி வந்த அனுமான் எங்கும் தேடியும் காணுமல் இாங்கி வருந்தி முடிவில் சம்பாதியிடம் சில குறிப்புகள் தெரிந்து உறுதி மிகுந்து ஊக்கியெழுத்து தென்கடல் எல்லையை அடைந்து