பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கம்பன் கலை நிலை

அரியதைச் சிறியேன் ஆசையால் செய்கின்றேன் பெரி யோர் பொறுத்தருளவேண்டும் என்ற கல்ை இது அவையடக்கம் ஆயது. இத்துடன் அமையாமல் மேலும் சில சொல்லுகின்றார்.

நொய்தின் கொப்ய சொல் நூற்கலுற்றேன் எனே வைத வைவின் மராமரம் ஏழ்துளை எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை செய்த செய்தவன் சொல்கின்ற தேயத்தே. ( 2)

வையம் என்னே இகழவும் மாசெனக்கு எய்தவும் இதியம்புவ தியா தெனின் பொய்யில் கேள்விப் புலமையி னேர்புகல் தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே. (3)

துறை யடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு உறை யடுத்த செவிகளுக்கு ஒதில், யாழ் கறை யடுத்த அசுனன் மாச்செவிப் பறை யடித்தது போலும் என்பாவரோ ! (4)

முத்தமிழ்த் துறை யின்முறை போகிய உத்த மக்கவி கட்கொன் றுணர்த்துவன் பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும், பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ ? (5)

அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள் தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ ? இறையும் ஞானம் இலாத என் புன்கவி

முறையின் நாலுணர்ங் தாரும் முனிவரோ ? (6)

இந்த ஆறு பாடல்களையும் ஆளுவயடக்கமாகக் கூறியிருக்கின்

ருர். இக்கவிகளைக் கவனமாக மனனஞ்செய்துகொண்டு கம்ப ருடைய மனநிலைகளே நினைவுற வேண்டும். ஒரே பாணத்தால் எழு மாமாங்களும் ஒருங்கே துளை எய்தும்படி எய்த மகா விானை இராமனுக்கு உரிய கதையை அரியமாதவாான வான்மீகி முனிவர் முன்னரே பாடியிருக்கிறார், இருந்தும் நானும் பாடப்புகுந்தேன்; இது என்னையே நான்வைதுகொண்டது போலாம். என் என்றால், எனது பாடலின் சிறுமையைப் பார்த்துவிட்டு அரிய முனிவரர் தாம் அருமையாகப் பாடியிருக்கிருரே! இந்தக் கம்பன்.ஏன் வம் பாக இடையேவந்து இப்படி உளறியிருக்கிருன்?’ என்று உலகம் என்னே வையத்தான் செய்யும் என்று முன்னுறக் குறித்தார்.