பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கம்பன் கலை நிலை

ஒரு வகுப்பு மட்டும் நெறியுடையதென்றால், அங்கே ஒழுக்க மும் யோக்கியமும் இழுக்கின்றி என்றும் நிலைத்து கில்லா; இரு வகையும் நெறியிசைந்து கின்றபோதுதான் பூரண யோக்கியம் யாண்டும் பொங்கி கிற்கும் என்க.

கோசல தேசத்தில் ஆடவர்கள் அறிவோடமைந்த ஐம் பொறி யடக்க முடையவர்கள்; அவ்வாறே மகளிரும் என்று கூற வேண்டியவர், அங்ானம் கூருது அவரது கண்ணே மட்டும் விதங்து கூறியது அதன் எண்ணரிய ஆற்றலை எதிாறிங் தென்க.

மற்றை இந்திரியங்களை விடக் கண்ணுக்கு-ஒரு.வி.சே- வன் மையுண்டு; பிறவெல்லாம் கின்ற இடத்தில் கின்று கொண்டேகம் பால் வந்ததை மட்டும் வளைந்து பற்றும்; கண்ணுே வெகு தாாத் தில் உள்ளவற்றையும் விரைந்துபோய்ச் சென்றுபற்றும்; ஆதலால் விழையாதவர்க்கும் விழைவுமூட்டி அது இழவு கூட்டிவிடும் என்க. ‘ஆண்கள் கல்லடிக்குத் தப்பினும் பெண்கள் கண்ணடிக்குத் தப் பார்’ என்ற பழமொழியால் அதன் உளவறியலாகும். ‘ கண் எனும் அம்பு பட்டுக் கருத்தழிந்து உடைந்தேன் அங்கோ’ என்ற கல்ை அதன் ஆற்றலும் வேகமும் அடுக்கிற அம் புலம்ை.

ஆடவர்களுடைய உள்ளங்களையும் உயிர்களையும் கவர்ந்து கம்பால் அவசமாய்க் கிடக்கும்படி பெண்களுக்குக் கண்கள் தொழில்புரிந்து எழில்மிகுந்து கிற்றலால் காவியக்கவிகள் யாவரும் அவற்றின் செயல் இயல்களை விழைந்து பாடலாயினர்.

கண்களின் இயல்பு

வேல் என விளங்கும்; சேல்என மிளிரும்: மால்என கி.மிரும்; காலனைக் கடுக்கும்; குழைமேல் எறியும், குமிழ்மேல் மறியும்; மலரும், குவியும், கடைசெல வளரும், சுழலும், கிற்கும், சொல்வன போலும், கழுர்ே பொருவிச் செழுர்ேக் கயல்போல் மதர்க்கும், தவிர்க்கும், சுருக்கும், பெருக்கும், இவைமுதல் இனியன அவிநயப் பல்குறி நவையற இருகண் சுவையொடு தோன்ற..’

(இபருங்கனுக-4-13)