பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நதி நிலை 95

பெண்கள் கண் புறம் செலாக் கோசலம் என்றது அது. இது, பெண்கள் கண் வலைப்படாதவர் பீடு என ஒங்கிய நகரம் என்றது. அது நாடு கூறியது. இது நகரம் கூறியது. இதனை இயற்றினவர் திருத்தக்க தேவர் என்பவர். அவர் சிறந்த தவ வொழுக்கமுடையவர். துறவி. கம்பருக்கு ஏறக்குறைய எழு அாறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தவர். கடைச் சங்க காலத்தி னர். விருத்தப் பாவில் முதல் முதல் காவியம் செய்தவர் அவரே. அதற்குச் சீவக சிந்தாமணி என்று பெயர். அருமையான அச் செந்தமிழ்க் காவியத்தைக் கம்பர் நன்கு பயின்றிருக்கிரு.ர். அதன் கருத்துக்கள் பல இவர் கருத்தில் கலந்திருக்கின்றன. இருவர் நால்களையும் மருங்குவைத்து ஒருங்கு நோக்கின் இவ் வுண்மை புலனும். இதில் வந்துள்ள பெண்ணும் கண்ணும் வலை யும் கம்பர் எண்ணத்தில் படிந்து முலையவர் கண் என வேறொரு கிலையில் அதில் வந்திருக்கின்றன. ஆயினும் புதுமை இனிமை நீதி ஒழுக்கம் முதலிய நலங்கள் சாந்து நூலின் நிலைமையை விளக்கி அது தனியே கலைமை பெற்றுள்ளது. இவற்றால் நாலா சிரியர் இருவர் மனநிலைகளும் அ.துபவங்களும் அறிய கின்றன. தேவர், உலக போகங்களை வெறுத்த துறவியர் ஆதலால் பெண் உறவு பிழை என எண்ணி அதனை ஒருவி கின்றவரின் பெருமை பேசினர். கம்பர், இல்லற இன்பங்களே நல்லறங்களாக நயங் துள்ளவர் ஆதலால் அதன் கலங்களை நன்கு ஆதரித்து இங்கனம் நவிலலாயினர். உள்ள கிலைகள் உரைகளால் உணய வந்தன. -

இவ்வாறு இம்மேதாவிகள் இருவருடைய கவி கிலைகளும், கருத்தமைதிகளும், உணர்வொருமைகளும் இனங்கண்டு இடை யிடையே தொடர்பாக இனி இதில் ஆராயவரும். -

கோசலத்தின் நிலைமை கூறும் இயல்பிலிருந்து இக்காவியத் தின் தலைமையான நிலைமைகள் சில இதுவரை ஆராய வந்தன.

கேரதலம் என்னும் பெயர்க்குப் பொருள் மகிழ்ச்சி கருவது;

==

பரிசுத்தமானது என்பதாம்.

இந்த இனிய நாட்டை வளப்படுத்திச் செழிப்புறச்செய்து பலவகையிலும் அலங்கரித்திருத்தலால் கோசலம் புனே ஆற்

மணி கூறுவாம்’ என்று தோற்றுவாய் செய்துகொண்டார். இது