உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.688 கம்பன் கலை நிலை - வார்க்கைகளில் அவனுடைய மனப்பண்பும் நன்றி யறிவும் வியப்பும் விம்மிகமும் விரிந்து கோன்றுகின்றன. அனுமானு டைய உக்கிர விர நிலைகள் உள்ளத்தைக் கவர்ந்துள்ளமையால் உரைகள் பரவசமாய் வெளி வந்துள்ளன.) சூடுபட்டது கொடிங்கர்; அடுபுலி துரந்த ஆடுபட்டதே பட்டனர் அனுமல்ை அரக்கர். தீ வாப்ப்பட்டு ஊர் அழிக்கதையும் அனுமான் கைப்பட்டு அரக்கர் அழிந்துள்ளதையும் இங்கனம் விளக்கி யருளினன். கன் சாதி என்ற அபிமானம் அறவே தோலைந்து போப் விடனன் புதியநிலையில் மருவியுள்ளமையை :- 5עגלה களால் துணுகி உணர்ந்து கொள்ளுகிருேம். பண்டைக்குலம் ஒருவிப் பார்வேர் தன் இராமனடித் தொண்டக் குலய்ைத் துலங்கினன் என்றபடி விபீடணன் விளங்கி நிற்கிருன். அந் நிலைமையைக் காவியம் எங்கனும் உவந்து கண்டு வியந்து வருகின்ருேம். அனுமான் அடுபுலி, அரக்கர் ஆடுகள். என்றது அன்று போரில் இவ் விரன் எதிரே அரக்கர்கள் அழிந்துபட்டுள்ள நிலைகளைத் தெளிவா அறிந்து கொள்ளவந்தது. ஒரு புலியைக் கண்டால் ஆயிரக் கண்க்கான ஆடுகள் அல மந்து ஒழியும்; அவ்வாறே அனுமானல் அரக்கர்கள் அல்ல லடைந்து அழிந்துள்ளனர். எல்லாருக்கும் புலிகள் போல் யாண் டும் அல்லல்களை விளைத்து வந்தவர் ஈண்டு அனுமான் எதிரே ஆடு களாய் அழிந்து பட்டது கால முடிவைக் காட்டி நின்றது. o அரக்கர் ஆகிய ஆடுகளை எளிதே அழிக்கவல்ல வீரப்பு. யாப் அனுமான் விளங்கி நிற்கிருன் என்றது இலங்கைமேல் படை எழுச்சி செய்து வந்துள்ள இராமனுக்கு அமைந்திருக் கும் துணைவலியை உணர்ந்து தெளிந்து உவந்து கொள்ள வந்தது. (சிங்க ஏறு இரண்டு வெங்கண் ஆளி வேங்கைகளோடு விறு கொண்டு வந்தன 37 ଶ୪T இராம லட்சுமணரது வரவை முன்னம் உருவகமா வுரைக்க குறிப்புகள் ஈண்டு வெளிப்படை யாய் வந்தன. உரை ஒலிகள் துறைகள் தோறும் தொடர்ந்து நெறிமுறைகளை வெளிப்படுத்தி நேரே ஒளி விசி வருகின்றன.)