உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3697 எவ்வழியும் உயர்க்க உத்தம நிலையில் அனுமான் ஒளி செய்து உலாவுகின்ருன். பிரம பகமும் இவனே உரிமையாக அடைய ஆவலோடு அவாவி தேரே எதிர்நோக்கி நிற்கின்றது. அனுமானுடைய அதிசய விரங்களையும் அற்புத மகிமை களையும் கேட்ட போது வானரர்கள் யாவரும் பேரானந்தம டைந்து பெரிதும் ஆர்வமாய் உரிமை கூர்ந்து நின்றனர். (வென்றி கேட்டலும் வீடு பெற்ருர் என வியந்தார். பேரின்ப நிலையைப் பெற்றவர் போல் வானர விரர்கள் இவ்வாறு உள்ளம் தளித்திருத்தலால் ೨ಣLDT6716 அவர கொண்டுள்ள அன்பும் மதிப்பும் அறிய வந்தன. தங்கள் குலம் அதிசய மேன்மையடைய அவதரித்து வந்துள்ள அற்புத விரன் என யாவரும் ஆனந்தம் அடைந்திருக்கின்றனர்.) காரிய நிலைகளும் வீரிய விளைவுகளும் விசித்திர கதியில் விளைந்திருக்கின்றன. மாருதியின் மாட்சிகள் இங்கே காட்சிக்கு வந்துள்ளமையால் இக்கப் பகுதி அனும கீதை ஆப் இனிதமைக் துள்ளது. இவனது அரிய நீர்மைகளையும் இனிய சீர்மைகளையும் கினேந்து வியந்து யாவரும் உவந்திருந்தனர். அன்றைய இரவு இனிது கழிந்தது; சூரியன் உதயம் ஆக வே காரிய விசாரணைகள் கருக நேர்ந்தன. சேனைகள் எழுந்து தென்னிலங்கை மேல் எவ்வாறு செல்வது? என இரவே ஆலோ சனைகள் கடந்தன. ஆதலால் ஆதவன் உதிக்கு முன்னரே யாவும் ஆயத்தமாயின. அருந்திறல் ஆண்டகை அருந்தவம் அமர்ந்தது. வருண மந்திரம் மருவி யிருந்தது. படைகள் கடல் கடந்து செல்ல வேண்டியிருந்தமையால் அகற்கு உரிய வழியை வேண்டிக் கடல் அரசனை வருணனை கினேந்து இராமன் மந்திர முறையோடு மருவி யிருக்கான் புனித மான இனிய இடத்தில் கருப்பைப் புல்லைப் பரப்பி கியம நிலையில் அமர்ந்து இக் குலமகன் கடலை நோக்கித் தவம் கிடந்தான். சூரிய உதயத்தில் இக் காரியம் நிகழ்ந்தது. அந்தக் காலக் குறிப் பைக் கருதியுணர்ந்து கொள்ளும்படி கவி காட்டி யிருப்பது சுவையை யூட்டி உவகைக் காட்சியாயப் ஒளி புரிந்துள்ளது. -> 463