உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3586 கம்பன் கலை நிலை நன்மைகளைப் போதித்துள்ளான்: 'கற்பரசியை விட்டு விடு; விடாதிருந்தால் இலங்கை நாசமாய் அழிந்து போம்; அரக்கர் குலம் பாழாம்; உன்முடித்தலை படித்தலத்தில் உருளும், நீயும் துடித்து மடிவாய்; அடுத்துள்ளகேடுகளை அறிந்து விரைந்து திருந்துக” என இடித்து அறிவுறுத்தி எவ்வளவோ நீதிகளை எடுத்துக் கூறியிருக்கிருன். அவன் யாதும் திருக்காமல் அகம் செருக்கி இகழ்ந்தமையால் இவன் உள்ளம் கொதித்து ஊரை விட்டு வெளியேறி அரக்கர் குலத்தை அடியோடு வெறுத்து ஒதுக்கிக் கருமமூர்த்தியான தங்களை அடைக்கலமாகக் கருதி ஈண்டு அடைந்திருக்கிருன். அவனுடைய நண்பர் நால்வர் உடன் வந்துள்ளனர்” என இன்னவாறு வானரக்கலைவன் கூற வே இம்மான விரன் அருகிருந்த துணைவரை உரிமையோடு நோக்கி உசாவ நேர்ந்தான். இங்கே நிகழ்ந்துள்ள காட்சிகளைக் கண்ணுான்றிக் காணு கின்ருேம். விேய மருமங்கள் ஒவிய உருவங்களாய் உலாவி o வருகின்றன. யாவும் கண் எதிரே நேரே காண்பது போல் ! நிகழ்ச்சிகள் நிலவி நிற்கின்றன. அரிய பல நீர்மைகள் அறிய வந்துள்ளன. மொழிகளின் ஒளிகள் விழிகளிப்ப வெளி எங் கும் சுடர்களை வீசுகின்றன. தருமமும் ஞானமும் தவமும் வேலியாய் கருணையங் கோயிலுள் இருந்த கண்ணன். மயிந்தன் வரும்பொழுது இராமன் இருந்த நீர்மையைக் கவி இங்ங்னம் வரைந்து காட்டியிருக்கிரு.ர். உரைப்படம் உணர்வு மனம் கமழ்ந்து உவகை சுரங்து ஒளிவிரிந்து மிளிர்கிறது. புறக்கே சூழ்ந்திருக்கின்ற பெரிய கோட்டை மதிள்; அகக்கே அமைந்துள்ள அழகிய கோயில்; அகன் வாயில், அக் கோயிலுள் எழுந்தருளி யிருக்கும் மூலமூர்த்தி முதலிய திவ்விய மான தெய்வக் காட்சிகளை இங்கே செவ்வையாய்க் காண்கின் ருேம். உருவகஅணி உணர்வு நிலையமாய் ஒளி புரிகின்றது. அரிய தவசி, பெரிய ஞானி, உயர்ந்த புண்ணியவான், சிறந்த பெருந்தகை; மிகுந்த பொறுமையுடையவன்; பெருங்கரு ஆனயாளன் என இவ்வாறு இராமனே கேரே கூருமல் உருவக