உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இரா ம ன். 375l. உருவகங்களாப் வந்துள்ள உரைகள் அரிய பல மருமங்கள் நிறைந்து சுவைகள் சுரங்து திகழ்கின்றன. மயிலுடைச் சாயலாள் என்றபடி எழில் விரிந்துள்ள சானகி அருகே இல்லாமையால் அஞ்சன வண்ணன் நெஞ்சம் மறுகியிருக்கிருன். பிரிவாற்ருமல் இக் கோமகன் உருகி மறுகி வருகிற அவ் வரவை இடையிடையே பார்த்துப் பரிவு கூர்ந்து வருகிருேம். உழுவலன்புகள் எங்கும் கெழுமி யுள்ளன. அச்ேசைமலை ஒத்த படிவத்து அடல் இராமன் என முன்னம் கோலங்காண் படலத்தில் குறித்தார்; இங்கே மரகத மலை என் ரும். மலையிலேதான் மயில் மகிழ்ந்திருக்கும்; அயலே போனல் இயல் நிலை சிதைந்து எழில் குலேந்து அது துயருழந்து படும். அந்த அவல நிலையும் ஈண்டு அறிய வந்தது. | அழகிய மரகத மலையில் என்றும் உல்லாசமாய் உலாவி உவந்திருந்த எழில் மயிலை (V கொலை வேடன் வந்து புலையாய்க் கவர்ந்து போனன்; களவுபோன அங்க இனிய இளமயிலை மீட்டிக் கொண்டு போக உடையவன் கேடி வந்திருக்கிருன்; அங்கவரவு நிலையில் உள்ளப் பரிவுகளும் உறவுரிமைகளும் உணர வந்தன. உழுவலன்புடைய விழுமிய துணைவியை இழந்து இவ் வீர மகன் வெய்துயிர்த்து வருகிருன். ஈர மதியும் கோர விடமாய்க் கொடுந்துயர் புரிக்கது என்றது அவனது கணிமை வாழ்வின் கடுமையும் கவலையும் காண வந்தது. - நீரூர்ந்த முந்நீர் கிலவலய நீள்கொடிஞ்சித் தேரூர்ந்த செல்வத் தியாகனே-ஆரூர விதிவிடங் காஅடங்கா வேலைவிடம் போலுமதிப் பாதிவிடம் காகடைக்கண் பார்த்து. (திருவாரூர் நான்மணி மாலை, 2) பரமபதியைப் பிரிந்துள்ள ஒரு சிவநாயகி கூறிய படியிது. திருவாரூரில் எழுந்தருளி யிருக்கிற இறைவனுக்கு விடங்கர் என்று பேர். ஏ. நாதா! உன் பிரிவால் வருந்தியுள்ள என்னை இந்தச் சந்திரன் கொந்தரவு செய்கிருன்; கொடிய விடம் போல் தோன்றி அடு துயர் புரிகிற இவனைக் கடிது நீக்கி என்னே விரைந்து பாதுகாத்தருள்” என்பாள் விடங்கா மதிப்பாதி விடம்